January 24, 2026
  • January 24, 2026
Breaking News
January 6, 2022

நாளை முதல் (ஜனவரி 7) வெளியாகிறது ‘அடங்காமை’ !

By 0 434 Views

திருக்குறள் சொல்லும் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை ‘.

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். 

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .

ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. 

இப்படத்தை 7 முதல் முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் “என்கிறார் இயக்குநர் ஆர்.கோபால்.

தயாரிப்பாளர்கள் பொன் .புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்பியே படத்தைத் தயாரித்து இருக்கிறார்களாம்.

இப்படத்தின் ஒளிப்பதிவை பி.ஜி.வெற்றியும், பாடல் இசையை கியூரன் மென்டிசனும்., திரை இசை M.S ஸ்ரீகாந்த்தும் அமைக்க, எடிட்டிங்கை துரைராஜ் ஏற்றிருக்கிறார். பாடல்களை ஏ.இரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன் எழுதியிருக்கிறார்கள்.

மூன் மீடியா சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 7 முதல் நாளை வெளியிடுகிறார்கள்.