November 12, 2026
  • November 12, 2026
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • நாட்டின் இளம் தலைமுறையினருக்காக ‘யங் ஸ்டார் நியோ’ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது ஸ்டார் ஹெல்த்! 
November 12, 2026

நாட்டின் இளம் தலைமுறையினருக்காக ‘யங் ஸ்டார் நியோ’ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது ஸ்டார் ஹெல்த்! 

By 0 13 Views

‘டைம் டிராவல்’ இப்போது ஹெல்த் இன்சூரன்ஸிலும்! 

சென்னை 12 நவம்பர் 2026: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE: STARHEALTH; BSE: 543412), இளம் தொழில் வல்லுநர்கள், திருமணமான தம்பதிகள் மற்றும் வளர்ந்து வரும் குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ‘யங் ஸ்டார் நியோ’ (Young Star NEO) எனும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் அறிமுகத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சமான ‘டைம் டிராவல்’ (Time Travel), இளம் வயதிலேயே காப்பீட்டைப் பெறுவதன் மூலம் பிரீமியம் தொகையில் வயது சார்ந்த சலுகையை இந்தியக் காப்பீட்டுத் துறையிலேயே முதன்முறையாக வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் முதல் வேலையிலிருந்து திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை நிலைக்கு மாறும்போது, இக்காப்பீடு தொடர்ந்து அவர்களுக்குப் பயன்படும் வகையில் வெளிநோயாளி பராமரிப்பு, மனநல மேலாண்மை, உடற்பயிற்சி மையங்களுக்கான அணுகல் மற்றும் வெல்னஸ் வெகுமதிகள் போன்ற நன்மைகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

இளம் வயதிலேயே மருத்துவ காப்பீடு எடுக்கும் முடிவை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தாண்டிய தேவைகளான — மருத்துவரைக் கலந்தாலோசித்தல், மனநல உதவி பெறுதல், சுறுசுறுப்பான உடற்பயிற்சி மற்றும் பிற்காலத்தில் வாழ்க்கைத் துணையையும் காப்பீட்டில் சேர்த்தல் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையிலான நபர்களுக்குக் கிடைக்கக்கூடிய ‘யங் ஸ்டார் நியோ’, ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகை (வரம்பில்லா காப்பீட்டுத் தொகையைத் ‘Unlimited Sum Insured’ தேர்வு செய்யும் வசதியுடன்) மற்றும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கான பாலிசி கால அளவுகளையும் வழங்குகிறது.

தொழில்துறையிலேயே முதன்முறை: ‘டைம் டிராவல்’ பிரீமியம் பாதுகாப்பு

யங் ஸ்டார் நியோ-வின் ‘டைம் டிராவல்’ என்ற தொழில்துறையின் முதல் அம்சமானது, வாடிக்கையாளர்களின் பாலிசி புதுப்பித்தல் பிரீமியம் தொகையை (காப்பீட்டுக் கோரல் செய்யப்படும் வரை) மாறாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், காப்பீட்டுக் கோரல் (Claim) செய்த பிறகும் கூட, புதுப்பித்தலின் போது வாடிக்கையாளரின் அப்போதைய உண்மையான வயதிற்கு ஏற்ப பிரீமியம் கணக்கிடப்படுவதற்குப் பதிலாக, அவர் பாலிசியில் இணைந்த வயது + 1 ஆண்டு (Entry Age + 1 year) என்ற அடிப்படையிலேயே பிரீமியம் கணக்கிடப்படும் (பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டது). பெரும்பாலான வயது-அடிப்படையிலான பிரீமியம் லாக் (Age-lock) அம்சங்கள் முதல் கிளைம் உடனேயே முடிவுக்கு வந்துவிடும். ஆனால், அவை எங்கு முடிகிறதோ அங்கிருந்தே இந்த ‘டைம் டிராவல்’ அம்சம் தொடங்குகிறது.

புதிய அறிமுகம் குறித்து ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (MD & CEO) திரு. ஆனந்த் ராய் பேசுகையில்:

“வாழ்க்கை முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனால் உங்கள் பிரீமியத்தைக் கணக்கிடப் பயன்படும் வயது எப்போதும் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஒரு கால இயந்திரம் (Time machine) தேவையில்லை — இளம் வயதிலேயே காப்பீடு தொடங்குவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டுமே போதுமானது. யங் ஸ்டார் நியோ-வின் ‘டைம் டிராவல்’ அம்சத்தின் மூலம், 24 வயதில் இணையும் ஒருவரது புதுப்பித்தல் பிரீமியம், அவர் 25, 35, 45 என வயதாகிக் கொண்டே சென்றாலும், பாலிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு 25 வயது என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படும். உங்கள் பிரீமியம் வயதைப் பின்னோக்கி நகர்த்துவது என்பதில் நாங்கள் குறிப்பிடுவது இதையே தான். உங்கள் வாழ்க்கை மாறும்போது, இளம் வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது முதன்மை தேர்வாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

எப்போதோ ஒருநாள் தேவைப்படக்கூடிய மருத்துவமனை சிகிச்சையை மட்டும் நோக்கமாகக் கொண்டு உங்கள் முதல் பாலிசி அமைந்திருக்கக் கூடாது. அது ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும், உங்கள் மனநலத்தைப் பேணவும், உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுவதோடு—பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையை பாலிசியில் சேர்க்க விரும்புவதையும் அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். தனித்துவமான சுகாதாரக் காப்பீட்டுத் துறையில் முன்னோடியாக விளங்கும் நாங்கள், டைம் டிராவல் (Time Travel), ஃபியூச்சர் ஷீல்ட் (Future Shield) மற்றும் ஸ்டார் த்ரைவ் (Star THRIVE) ஆகியவற்றின் மூலம் இந்தத் தேவைகளை ஒன்றாகக் கொண்டு வருகிறோம். வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள மக்களுக்கு இக்காப்பீட்டை மிகவும் பயனுள்ளதாக்கவும், மேலும் பல இளைஞர்களை இளம் வயதிலேயே காப்பீடு எடுக்க ஊக்குவிக்கவும், சுகாதாரக் காப்பீட்டின் பரவலை விரிவுபடுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.

குடும்பங்களுக்கான முதல் பாலிசி! 

திருமணத்திற்கு முன்பே காப்பீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ‘ஃபியூச்சர் ஷீல்ட்’ (Future Shield) அம்சம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், பாலிசியில் ஏற்கனவே நிறைவடைந்த காத்திருப்பு காலங்களின் (waiting periods) நன்மைகளை, பிற்காலத்தில் பாலிசியில் சேர்க்கப்படும் வாழ்க்கைத் துணைக்கும் மாற்றிக்கொள்ள முடியும். இதனால் இளம் வயதிலேயே காப்பீடு தொடங்குவதன் முழுப் பயனும் பாதுகாக்கப்படுகிறது.

அன்றாட மருத்துவப் பராமரிப்புத் தேவைகளுக்கு ‘ஸ்டார் ஓபிடி பிரீமியர்’ (Star OPD Premier) உறுதுணையாக அமைகிறது. இது பாலிசி பிரீமியத்தைப் போல 5 மடங்கு வரை (அதிகபட்சமாக ₹1 லட்சம் வரம்பிற்கு உட்பட்டு) குறிப்பிட்ட வெளிநோயாளி (OPD) செலவுகளை ஈடுசெய்கிறது. பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, கிளினிக் ஆலோசனைகள், பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள், பல் பராமரிப்பு, கண் பராமரிப்பு மற்றும் விபத்து கால வெளிநோயாளி சிகிச்சைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இளம் தலைமுறை வாடிக்கையாளர்கள் மீதான இக்கவனம் மனநலம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்-இணைப்பு (E-Connect), ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உளவியலாளர் ஆலோசனைகள், மனநல ஆதரவு மற்றும் மன அழுத்த மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டுடியோக்களை வாரத்திற்கு 3 முறை வரை பயன்படுத்திக் கொள்ளும் ‘ஸ்டே ஃபிட்’ (Stay Fit) வசதியும் வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகைகளுடன் சேர்த்து மருத்துவமனை அனுமதி, டே-கேர் (Day-care) மற்றும் நவீன சிகிச்சைகள், ஆயுஷ் (AYUSH), வீட்டுப் பராமரிப்பு சிகிச்சை, ஹோம் ஹாஸ்பிட்டலைசேஷன் (Domiciliary hospitalisation) மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான காப்பீட்டுப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. மேலும், காப்பீட்டுத் தொகையில் 100% வரை வரம்பற்ற தானியங்கி புதுப்பித்தல் (Unlimited Automatic Restoration) வசதியும் இதில் அடங்கும். பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சம் இன்ஸூர்டு மல்டிபிளேயர் (Sum Insured Multiplier), ஹெல்த் பூஸ்டர் (Health Booster), நோ க்ளைம் போனஸ் (Cumulative bonus), இரண்டாவது மருத்துவ ஆலோசனை (Second medical opinion), பிரீமியம் தள்ளுபடி (Premium waiver) மற்றும் வரம்பற்ற டெலி-கன்சல்டேஷனுடன் கூடிய AI-சார்ந்த ஃபேஸ் ஸ்கேன் (AI-powered face scan) போன்ற நீண்டகால ஆதரவு அம்சங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

‘ஸ்டார் த்ரைவ்’ அறிமுகம்: அன்றாட ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான வெகுமதிகள்

‘ஸ்டார் த்ரைவ்’ (Star THRIVE) என்பது ஸ்டார் ஹெல்த்டின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான வெகுமதி திட்டமாகும். இது ஸ்டார் ஹெல்த் வாடிக்கையாளர் செயலி (Star Health Customer App) மூலம் ‘யங் ஸ்டார் நியோ’ பாலிசியுடன் கிடைக்கிறது. இத்திட்டம் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுக்கான வெகுமதிகளுடன், மனநல ஆதரவு, மன அழுத்த மேலாண்மை, பெண்களுக்கான பிரத்யேக ஆரோக்கிய வழிகாட்டுதல் மற்றும் சர்க்கரை நோய் (Diabetes), உயர் ரத்த அழுத்தம் (Hypertension), இதய ஆரோக்கியம் (Cardiovascular health), உடல் பருமன் (Obesity) ஆகியவற்றுக்கான நோய்க்கட்டுப்பாட்டு மேலாண்மை திட்டங்கள் (Condition Management Programs) போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்குகிறது.

பாலிசிதாரர்கள் ஒரு பாலிசி ஆண்டிற்கு தகுதியுள்ள நபருக்கு அதிகபட்சமாக 18,000 ‘த்ரைவ் காயின்கள்’ (THRIVE Coins) வரை சம்பாதிக்க முடியும். எளிதான தொடக்கம் – Seamless Start (டிஜிட்டல் ஆன் போர்டிங் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் கணக்கு – ABHA இணைப்பு), ஹெல்த் ட்ராக் புரோ (தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் சுகாதார மதிப்பீடுகள்) மற்றும் வெல்னஸ் சர்க்கிள் (தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்பாடுகள்) ஆகிய அம்சங்கள் மூலம் இந்த வெகுமதிகளைப் பெறலாம்.

சில்வர், கோல்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் போன்ற நிலைகளை (Tiers) எட்டும் போது, கூட்டாண்மை பெற்ற நல்வாழ்வு பிராண்டுகளுக்குத் தகுதியுள்ள நபருக்கு ₹5,000 வரை மதிப்புள்ள ‘ஹெல்த் வவுச்சர்கள்’ (Health Vouchers) வழங்கப்படுகின்றன. சேகரித்த காயின்களை இரு வழிகளில் பயன்படுத்தலாம்: 1 காயின் = ₹1 என்ற மதிப்பில் பாலிசி காலத்தின் பிரீமியம் தொகையில் 100% வரை வெளிநோயாளி (OPD) மற்றும் நல்வாழ்வு சேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது 1 காயின் = ₹0.20 என்ற மதிப்பில் பாலிசி புதுப்பித்தல் பிரீமியத்தைக் குறைத்துக் கொள்ள பயன்படுத்தலாம் (திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது).

About Star Health and Allied Insurance: Star Health and Allied Insurance Co. Ltd. (BSE: 543412 | NSE: STARHEALTH) is the market leader in standalone health insurance in India. The Company commenced operations in 2006 as India’s first Standalone Health Insurance Company. Star Health Insurance provides Health, Personal Accident and Travel Insurance to its customers. The Company has grown to emerge as one of the preferred health insurance companies in India with several pioneering products and services to its credit. With customer-centricity at its core, the Company has developed superior and innovative product offerings, service capabilities and a seamless claims management process. Star Health offers tailor-made products to cater to the needs such as cancer, diabetes, cardiac illnesses and to specific segments such as senior citizens, women and children. Star Health is India’s first health insurance company to settle over 1 crore claims.    

Star Health and Allied Insurance Co. Ltd. has a strong multi-channel distribution network of 900+ offices, over 8.7 lakh+ agents and robust bancassurance and financial institution partners. The Company has 17,000+ network hospitals and 18,500+ employees. 

Talk to Star helps customers plan hospitalisation with confidence through pre-admission guidance on policy coverage, network hospitals, the cashless process and required documents. Available in regional languages, the service helps customers and families prepare for admission with greater clarity. Call 7200 222 333 between 8 am and 8 pm for support before planned hospitalisation.

For more information visit www.starhealth.in     

Media Contact Adfactors PR Contact

Akansha Pradhan

Head – PR & Corporate Communication

Star Health and Allied Insurance Company Limited

Mobile: +91 98676 22227

Email: akansha.pradhan@starhealth.in

Kashni Kadakia

Email: kashni.kadakia@adfactorspr.com