எந்தப்படத்துக்கும் இல்லாத வகையில் 96 படத்தை நான்கு நாள்கள் முன்னாலேயே பத்திரிகையாளர் காட்சி போட்டார்கள். படமும் ‘செம’ என்ற அளவில் மீடியாக்களும் கொண்டாடிவிட, முன் பதிவுகள் முண்டியடித்து நிரம்ப, “அப்பாடா… படம் தப்பிச்சுது…” என்று படத் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பெருமூச்சு விட்ட வேளை… அவர் முற்பகல் செய்த வினை நேற்று பிற்பகலில் விஷால் வாயிலாக வேலையைக் காட்டியது.
விஜய் சேதுபதியின் படங்களிலேயே விடிகாலைக் காட்சியாக 96 படம்தான் இன்று அதிகாலை 5 மணிக்குத் திரையிடுவதாக அமைந்தது. ஆனால், எல்லா நம்பிக்கையும் போய்யாகிப்போனது நேற்று இரவில். விஷயம் இதுதான்.
ஏற்கனவே இதே தயாரிப்பாளர் நந்தகோபால்தான் விஷால் நடித்த ‘கத்திச்சண்டை’ படத்தைத் தயாரித்தவர். அந்த வகையில் அவர் விஷாலுக்கு பேமெண்ட் பாக்கியாக வட்டியுடன் சேர்த்து மூன்றரைக் கோடி தரவேண்டுமாம். இது இல்லாமல் ஒரு கோடி வேறு வகையில் பேலன்ஸ் என்றிருக்க ஆகக் கூடி நாலரைக் கோடி பணத்தை செட்டில் செய்தால்தான் படம் வெளியாகும் என்ற நெருக்கடியில் இரவெல்லாம் பஞ்சாயத்து நடந்ததில் பலன் ஒன்றுமில்லாமல் போனது.
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் மற்றும் நடிகர் சங்கச் செயலாளரான விஷாலே ஒரு பட வெளியீட்டுக்குத் தடையாக நிற்பதா என்று பல தயாரிப்பாளர்களும் கொதித்தெழுந்த வேளையில் நிஜ ஹீரோவாக விஜய் சேதுபதி உள்ளே புகுந்து அந்த நாலரைக் கஒடீகும் தானே பொறுப்பேற்பதாகக் கூடி படத்தைக் காப்பாற்ரி விட்டிருக்கிறாராம்.
ஆக, 96 படத்தின் வழக்கமான முதல் ஷோ வெளியாவதில் எந்தத் தடையும் இல்லை என்றாகி விட்டது. விஷால் தன் பணத்துக்காகத் தடை போட, தன் பணத்தை ஈடு கொடுத்து படத்தைக் காப்பாற்றிய விஜய் சேதுபதியின் செய்கையை வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறது கோலிவுட். 96 படம் பார்க்கும் ரசிகர்களும் அவரைக் கொண்டாடப்போவது நிச்சயம்..!
நீதி என்று பார்த்தால் அவரவர் வலி அவரவர்களுக்கு..!