July 9, 2025
  • July 9, 2025
Breaking News

Monthly Archives: June 2020

மக்கள் மீதான சுமையை மின் வாரியமும் அரசும் இறக்கி வைக்கட்டும் – பிரசன்னா

by on June 4, 2020 0

சில நாட்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இது தொடர்பாக பிரசன்னா “இந்த கோவிட் ஊரடங்கின் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்..?” என்று கேட்டிருந்தார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் நேற்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான […]

Read More

வைரல் ஆகி வரும் டிக் டாக் ஐஸ்வர்யா ராய் வீடியோ

by on June 3, 2020 0

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் பேசிய வசனத்தை இளம்பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணை ஐஸ்வர்யாராயைப் போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர். மேலும் சிறிய பட்ஜெட் ஐஸ்வர்யாராய், ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கமெண்டுகளும் பறக்கின்றன. இதே போல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் போலவே ஒரு பெண் இருப்பதாகக் கூறி போன வருசம் வைரலாக்கினர் நெட்டிசன்கள். டிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் […]

Read More

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் – மத்திய அமைச்சர் விளக்கம்

by on June 3, 2020 0

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள 9,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக கூறினார். குறிப்பாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சத்தால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும் […]

Read More

3 மணி நேரத்தில் 4 ரீல்களுக்கு இசை அமைத்த சாதனை – இசைஞானி பற்றி ஏவிஎம் சரவணன்

by on June 3, 2020 0

நியாயப்படி இன்றுதான் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் ஜூன் 3 ஆகிய இன்று தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்பதால் தன் பிறந்த நாளை ஒரு நாள் முன்னதாக மாற்றிக்கொண்டார். ஆக இசைஞானியின் உண்மையான பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை முன்பொரு சமயம் ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்னதிலிரந்து பகிர்ந்துள்ளோம்… “இயக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது இசையில் […]

Read More

கொரோனா பிடியில் சிக்கிய சின்னத்திரை நடிகை குடும்பம்

by on June 2, 2020 0

இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான மொஹினா குமாரி சிங் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் அவர் மற்றும் கணவர், ஐந்து வயது மகன், மாமியார் மற்றும் சில குடும்பத்தினர் கொரோனா வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வந்தது. இதுபற்றி தற்போது அவர் மௌனம் கலைத்தார்.  அவர் கூறும்போது “தூங்க முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் குடும்பத்தினரில் முக்கியமாக இளயவர்களுக்கும், வயதானவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். […]

Read More

சென்னையில் சேவையைத் தொடங்கியது ஊபர் கால் டாக்சி

by on June 2, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய பொது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தைத் தொடர்ந்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கின. கால் டாக்சி சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஊபரும் சேவையை நிறுத்தியது. மே மாதம் 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவையை மத்திய அரசு தொடங்கியதனால் விமான நிலையத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நேற்றில் இருந்து ஆட்டோ, கால் டாக்சி போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Read More

பாலுமகேந்திரா பற்றிய சசிகுமாரின் அழியாத கோலங்கள்

by on June 1, 2020 0

திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது. “ஹலோ சார்…” “நான் உன்னைப் பார்க்க வரலாமா?” “சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்” ‘ஏன், எனக்கு உன்னோட ஆபிஸ்ல ஒரு கப் காபி கொடுக்க மாட்டியா?” நான் என்ன சொல்ல முடியும்? காலத்தால் அழியாத பெரும் படைப்புகளைக் கொடுத்த கலைஞன். என் அலுவலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாலு மகேந்திரா […]

Read More

பிந்து மாதவி பிளாட்டில் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்ட சோகம் – வீடியோ

by on June 1, 2020 0

‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிந்துமாதவி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த ‘கழுகு 2’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து ‘மாயன்’, ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களில் நடித்து வந்த பிந்துமாதவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளார். இந்நிலையில் தான் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தங்கள் ஃபிளாட்டில் எல்லோரும் தனிமைப்பட்டிருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் […]

Read More

மனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார்

by on June 1, 2020 0

நடிகர் மனோபாலா தன் யூ டியூப் சேனலுக்காக காமெடி நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார். அதில் தன் வாழ்க்கை அனுபவங்களைப் பேசியிருந்த சிங்கமுத்து, இடையிடையே நடிகர் வடிவேலு குறித்தும் சில கமெண்ட்டுகளை இடைச்செருகல் ஆகப் போட்டிருந்தார். அதே சமயம் ”வடிவேலு நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய்விட்டார்” எனச் சொல்லியிருந்த சிங்கமுத்து, அவருக்கும் வடிவேலுக்கும் இடையில் நடக்கும் வழக்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போது, ”அந்த வழக்கு முடிய 10 வருஷம் ஆகலாம்’’ என்று […]

Read More