June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: September 2018

விஜய் தேவரகொண்டா நடித்தது எனக்கு வசதி – நோட்டா இயக்குநர் ஆனந்த் சங்கர்

by on September 30, 2018 0

‘நோட்டா’ படத்தில் ‘விஜய் தேவரகொண்டா’வை தமிழுக்கு அறிமுகப்படுத்த நினைத்த காரணத்தைக் கேட்டபோது இயக்குநர் ஆனந்த் சங்கர் கூறியது… “நோட்டா’ ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது. காரணம் இதில் ஹீரோவைத்தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ‘விஜய் தேவரகொண்டா’ உருவாகிக்கொண்டு இருந்தார். தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். […]

Read More

சிகை படமும் என்னைப் பற்றி நிறைய பேச வைக்கும் – பரியேறும் பெருமாள் கதிர்

by on September 30, 2018 0

திரையிட்ட இடங்களிலெல்லாம் பரியேறும் பெருமாள்’ வெற்றிக்குதிரையில் ஏறி பவனி வந்து கொண்டிருக்கிறது. படத்தின் நாயகன் கதிர் மீது ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ படங்களுக்குப் பின் நம்பிக்கையும் கூடியிருக்கிறது. படம் பற்றிப் பேசினார் கதிர். “பரியேறும் பெருமாள்’ என்னைத் தேடி வந்த வாய்ப்பல்ல. நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்.. அவருக்கும் நான் சரியாக […]

Read More

தீபாவளிக்கு அமிதாப் ஆமிர் கான் நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்-டிரைலர் இணைப்பு

by on September 30, 2018 0

‘யாஷ் ராஜ்’ என்றாலே பிரமாண்டம். இப்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன், அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ . இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ‘கத்ரீனா கைப்’ மற்றும் ‘பாத்திமா சனா சேக்’ ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி உள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் பாலிவுட்டின் மிகப்பெரிய […]

Read More

1000 வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன் – ஜாமீனில் வெளிவந்த கருணாஸ்

by on September 29, 2018 0

நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர், துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்ய மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் […]

Read More

சங்கத்துடன் மல்லுக்கட்டி வென்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள்

by on September 29, 2018 0

‘கபாலி’. ’24’, ‘காஷ்மோரா’, ‘மெட்ராஸ்’, ‘சண்டக்கோழி-2’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருப்பவர்கள் அன்பறிவ் என அழைக்கப்படும் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்..? தங்களிடம் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்களுக்கு தனி […]

Read More