May 2, 2024
  • May 2, 2024
Breaking News

Monthly Archives: May 2018

காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

by on May 9, 2018 0

ரஜினிகாந்த் நடித்து ஜூன் 7-ம்தேதி வெளியாகவிருக்கும் ‘காலா’வின் பாடல்கள் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இருந்தும், பாடல்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸை இன்று தனது ட்விட்டர் வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டு விட்டார். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த பாடல்களில் ரஜினி ரசிகர்கள் குஷியடைந்து வரும் நிலையில் சில பாடல் வரிகள் அரசியலுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கருத்தும் பரவி வருகிறது. அந்தப்பாடல் வரிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை […]

Read More

மோடி பொய் சொல்லிக்கொண்டே போகிறார் – பிரகாஷ்ராஜ் தாக்கு

by on May 9, 2018 0

தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் – “இந்திய சரித்திரத்தில் இப்படி பொய் சொல்கிற பிரதமரை என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. அவருக்கு எதுவுமே தெரியாது. பொய் சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். அந்த பொய்களுக்கு நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் நான் ஒரு குடிமகன். நான் எந்த கட்சியையும் சாரதவன். நான் ஒரு கலைஞன். கட்சியில் இருந்து வளர்ந்தவன் […]

Read More

இருட்டு அறையில் குருட்டுக் குத்து குத்தும் படங்கள்

by on May 8, 2018 0

அறிமுக இயக்குநர் விவி இயக்கியுள்ள படம் ‘நரை.’ இதில் வழக்கமாக இளம் நாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதை விடுத்து, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவதாக வரும் கதைக்கரு நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும். இதில் முதியவர்களாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, ‘ஜூனியர்’ பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ‘சங்கிலி’முருகன் பேசிய போது, […]

Read More

தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

by on May 8, 2018 0

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளுடன், இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டனர். இதனைத் தடுக்க, தலைமை செயலகத்துக்குச் செல்லும் சாலையில் தடுப்பு வேலி அமைத்து ஆறாயிரம் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தினர். கடற்கரை சாலை, காமராஜர் சாலையிலும் வாகன சோதனை நடந்தது. இந்த நடவடிக்கையின் முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டிருக்க , இன்று காலை […]

Read More

மோடியிடம் சித்தராமையா 100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

by on May 7, 2018 0

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வழக்கறிஞர் உக்ரப்பா, பா.ஜ.க. தேசிய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்களை அனுப்பி வைத்துள்ளார். பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ்களின் நகலில் இருந்து:- ‘எனது கட்சிக்காரரான முதல் மந்திரி சித்தராமையா மீது தரக்குறைவான கருத்துக்களையும் பொய் கருத்துக்களையும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். சித்தராமையா மீது சுமத்தப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் […]

Read More

விஷாலும் அர்ஜுனும் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்- சமந்தா அக்கினேனி

by on May 6, 2018 0

‘இரும்புத்திரை’ மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தில் விஷாலுடன் ஜோடி போடும் நாயகி சமந்தா அக்கினேனி, படம் பற்றி பிரைவேட்டாகப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்… “நமக்கு இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவற்றை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அவற்றுக்கு நாம் அடிமை ஆவதுதான் தவறு. இதை எடுத்துக் கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இரும்புத்திரை இருக்கும். இந்தப் […]

Read More

ஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா

by on May 6, 2018 0

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சொனியாவும் வரும் 8ம்தேதி ஒரே நாளில் பிரச்சாரம் செய்கின்றனர். இந்நிலையில், பெலகாவியில் நேற்றைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றார். எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டினார். அத்துடன் நிற்காமல், யாரெல்லாம் […]

Read More

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த நீட் எப்படி..?

by on May 6, 2018 0

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் பேர் பங்கேற்றனர். வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், சென்றனர். இவர்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு சென்றனர். மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களுக்குச் சென்றனர். […]

Read More