November 14, 2024
  • November 14, 2024
Breaking News
May 8, 2018

இருட்டு அறையில் குருட்டுக் குத்து குத்தும் படங்கள்

By 0 1159 Views

அறிமுக இயக்குநர் விவி இயக்கியுள்ள படம் ‘நரை.’ இதில் வழக்கமாக இளம் நாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதை விடுத்து, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவதாக வரும் கதைக்கரு நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.

இதில் முதியவர்களாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, ‘ஜூனியர்’ பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Ethan

Narai Heroine Ethan

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ‘சங்கிலி’முருகன் பேசிய போது, “அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவது திருவிழாவுக்குப் போவது மாதிரி. இப்போது அப்படியே எல்லாம் மாறிப் போயிருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை. சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் காலகட்டத்தில் “நரை” போன்ற படம் வருவது நல்ல விஷயம் தான். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும் போதே அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார். ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ? என்று நிறைய முறை குழம்பியிருக்கிறேன்.

இப்படத்தில் சொல்ல வேண்டியது இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக். நிறைய செலவு பிடிக்காமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்துக்கும் இயக்குநர் விவி-க்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். ‘நரை’ சந்தேகமேயின்றி வெற்றிபெறும்” என்று பேசினார்.

‘காதலுக்கு மரியாதை’ தந்த தயாரிப்பாளரான சங்கிலி முருகன் வாயால் வாழ்த்துப் பெற்றது இயக்குநர் ‘விவி’க்குப் பெருமைதான்..!