November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இறங்கியாச்சு இன்வெஸ்ட் பண்ணியாச்சு வந்தா ஷ்யூரா அடிக்கவேண்டியதுதான் – ரஜினி
November 3, 2018

இறங்கியாச்சு இன்வெஸ்ட் பண்ணியாச்சு வந்தா ஷ்யூரா அடிக்கவேண்டியதுதான் – ரஜினி

By 0 870 Views

இந்தியாவின் பிரமாண்டப் படமாகக் கூறப்படும் 2.ஓ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப் பட்டது.

இந்தப் படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தாலும் உலகிலேயே முதல்முறையாக 4டி எஸ் எல் ஆர் என்ற புதிய ஒலி நுட்பத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதுபற்றி ஷங்கர் கூறும்போது….

“3டி ஒலிநுட்பம் இடம் வலம் மேலே ஒலி கேட்கும் அளவில் இருக்கும். 4டி என்பது கால்களுக்கு கீழும் ஒலி கேட்கும். இதைத் தமிழ் படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கனவு இருந்தது. அது இதில் நிறைவேறியது.

இந்த ஒலி நுட்பத்தை எல்லா தியேட்டர்களிலும் அமைத்து படத்தை ரசிக்க வைக்க எக்சிபிட்டர்களைக் கேட்கிறேன்.

ஃபிப்த் ஃபோர்ஸ் என்றால் இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி.

இப்படி நடந்தா எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் இந்தப் படம். படத்தின் பலம் ரஜினி.  இந்தப் படத்தில் நாம் வசீகரன், சிட்டி, ‘ஜயண்ட் சிட்டி’ன்னு ரஜினியைப் பார்க்கப் போறோம்.

3.ஓவுக்கு சில யோசனைகள் இருக்கு. காலம் ஒத்து வரும்போது பண்ண முடியுமா, பார்க்கலாம்…” என்றார்.

ரஜினி பேசும்போது, “இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். இதில் 600 கோடிகளைக் கொட்டியிருக்கிறார் சுபாஸ்கரன். இது அதைவிட இரண்டு மடங்கு வசூலிக்கும்.

இது ஒரு த்ரில்லர், என்டர்டெய்னர் மற்றும் சிறந்த செய்தி சொல்லும் படம். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமில்லை, எல்லா உயிர்களுக்கும் என்ற நல்ல செய்தி இருக்கிறது.

இதை பார்க்கும் மக்களே இதை புரமோட் பண்ணுவார்கள். 

எனக்கு படம் பண்ணும்போது உடல்நிலை சரியில்லை. என்னால் கனமான உடை அணிந்து நடிக்க முடியவில்லை. ஷங்கரிடம் என்னால் நடிக்க முடியாது. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றேன்.

” நீங்க இல்லாம இந்தப்படம் இல்லை சார். உங்களால என்ன முடியுமோ அதைப்பண்ணுங்க போதும்…”னார்.

டாக்டர்கள் நான் 4 மாதம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னப்ப, “4 வருஷம் ஆனாலும் நீங்க வந்து நடிங்க…”ன்னார் சுபாஸ்கரன்.

இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள் அமைஞ்சதாலதான் என்னால இந்தப்படத்துல நடிக்க முடிஞ்சது.

இறங்கியாச்சு… இன்வெஸ்ட் பண்ணியாச்சு… வந்தா ஷ்யூரா அடிக்கவேண்டியதுதான்…. (அரசியல் பஞ்ச் என்று ரசிகர்கள் கைத்தட்ட) நான் படத்தைச் சொன்னேன்..!” என்றார்.