October 16, 2025
  • October 16, 2025
Breaking News
September 9, 2018

3டி யில் வெளியாகவுள்ள 2 பாயிண்ட் O டீஸர்

By 0 1091 Views

ஷங்கர் இயக்கி, ரஜினி நடிப்பில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ரஜினிகாந்துடன் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளதும், ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பதும் தெரிந்த் விஷயங்கள்.

2.O Teaser

2.O Teaser

இதுவரை தெரியாத விஷயம், வெளியாகவுள்ள டீஸர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் திரையிடப்படவுள்ளதுதான்.

அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை ரசிகர்கள் 3D யில் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் 2 பாயிண்ட் O டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படுமாம். 3D யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடியூபிலும், 2D திரையரங்குகளில் 2D தொழில்நுட்பத்திலும் 2 பாயிண்ட் O டீசர் திரையிடப்படவுள்ளது.

இன்னும் 3 தினங்களில் புதிய பரிணாமத்தில் 2 பாயிண்ட் O படத்தின் டீசரை ரசிக்க தயாராகலாம்..!