May 2, 2025
  • May 2, 2025
Breaking News
December 30, 2018

12 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வை – விஸ்வாசம் சாதனை

By 0 918 Views

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க, ஷிவா இயக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடாக இருக்க, அதன் டிரைலர் இதுவரை வெளியாகவில்லையே என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தார்கள்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் ரிலீஸாக இன்னும் பதினோரு நாள்களே இருக்க, ‘விஸ்வாசம்’ டிரைலர் இன்றுதான் வெளியிடப்பட்டது. நடு இரவில் அஜித் படங்களின் டிரைலர் வெளியாகும் வழக்கத்தை மாற்றி இன்று பகல் 1.30க்கு டிரைலர் வெளியானது.

வெளியானதிலிருந்தே டிவிட்டரில் பற்றிக்கொண்டது எனலாம். மளமளவென்று பார்வைகள் எகிற, லைக்குகள் குவிய, நடு இரவு 12 மணி நிலவரப்படி 95 லட்சங்களை (9.5 மில்லியன்) தாண்டியிருந்தது. இன்னும் ஒரு மணிநேரத்தில் கண்டிப்பாக அது ஒரு கோடியைக் கடக்கும் என்பது உறுதி.

வெளியான 12 மணி நேரத்துக்குள் ஒரு கோடி (பத்து மில்லியன்) பார்வைகளையும், பத்து லட்சம் (ஒரு மில்லியன்) லைக்குகளையும் பெற்றது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஒரு சாதனை..!

அந்த சாதனை டிரைலர் கீழே…