March 22, 2025
  • March 22, 2025
Breaking News
January 8, 2020

தர்பார் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்த காரணம்

By 0 927 Views

நாளை 09-01-2020 அன்று வெளியாகவிருக்கும் லைகாவின் ‘தர்பார்’ எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தே விட்டது. ஒரு வாரத்துக்கு டிக்கட்டுகள் எங்குமே கிடைக்காது என்ற சூழலில் இன்று அமெரிக்காவில் தர்பார் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது.

இதற்கெல்லாம் ஒரே காரணம் இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமென்பதாலும் அதை முதல்முதலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதாலும்தான். இந்தப்படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற கேரக்டரில் வரும் ரஜினி மும்பை காவல் ஆணையராக வருகிறார்.

“அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டிய அவசியம் என்ன..?” – பதில் சொன்னார் ஏஆர் முருகதாஸ்.

“ஓரு சூப்பர் ஸ்டாருக்கான சூப்பர் ஸ்டோரியில் அவருக்கு ஈடு செய்ய ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நம்பினோம். 

அது சரியான தேர்வுதான் என்று சொல்லும் அளவில் திரையில் ரஜினியும், நயன்தாராவும் இடம் பெறும் காதல் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளன. ஒரு சூப்பர் ஸ்டாருக்கான கதையில் ஹீரோயின் பாத்திரத்துக்கு எந்த அளவுக்கு இடம் பெற முடியுமோ அந்த அளவுக்கு நயன் தாராவின் பாத்திரம் இடம் பெற்றுள்ளது.

முக்கியமாக ஸ்கிரீன் பிரசன்ஸ். ரஜினிக்கு ஈடு செய்ய அவரைவிட்டால் வேறு யாரையும் நினைக்க முடியவில்லை.

அத்துடன் நான் ‘கஜினி’யில் பார்த்த நயன்தாரா இப்போது இல்லை. அப்போது அவர் அனுபவம் குறைந்த  நடிகையாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால், அவரைவிட அசினின் பாத்திரம் அதில் சிறப்பாக அமைந்துவிட்டதாக அவருக்கு மனக்குறையே இருந்தது.

ஆனால், அவரது அனுபவத்தில் இப்போது எல்லாவற்றையும் திறம்பட மேம்படுத்திக்கொள்ளும் அளவில் வளர்ந்து விட்டார். அவர் தனிப்பட்ட முறையில் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருக்க, சூப்பர் ஸ்டாரின் படத்தில் தனக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அந்த அளவில் தன் பாத்திரத்தை எப்படி செம்மையாக அமைத்துக்கொள்ள முடியும் என்று அணியும் உடைகளில் இருந்து ஒவ்வொன்றையும் நேர்த்தியாகத் தேர்வு செய்து நடித்துள்ளார்.

அந்த அளவில் அவரால்தான் இந்தப் பாத்திரத்துக்கு உருவம் கொடுத்து ரஜினி சாருக்கு ஈடு கொடுத்துத் தோன்ற முடியும்..!”

நாளைக்கு பாத்துட்டா போச்சு..!