July 6, 2025
  • July 6, 2025
Breaking News
January 8, 2020

தர்பார் 4 நாள்களுக்கு சிறப்புக் காட்சிகள் அனுமதி

By 0 657 Views

சாதனை என்பது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அதுவும் சினிமாவில் சாதிப்பது ஆனானப்பட்ட வேலை. அப்படி சாதித்து 70வது வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ‘தர்பார்’ படம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் வழக்கமான காட்சிகளுக்கு முன்னால் பட ரிலீஸ் அன்று அதிகாலையில் சிறப்புக் காட்சி நடத்தப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

அந்த சிறப்புக் காட்சிக்கு மாநில அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அப்படி ‘தர்பார்’ படத்துக்கும் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், இது சூப்பர் ஸ்டார் படமாயிற்றே..? அவருக்குக்கென்று சிறப்புத் தகுதி உண்டல்லவா..?

அந்த தகுதியின் அடிப்படையில் தர்பார் படத்துக்கு நாளை வெளியாகும் தேதியில் மட்டுமல்லாமல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கும், ஆக 4 நாள்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இப்படி ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பாக அமைந்திருக்கிறது இந்த வருடப் பொங்கல்..!