June 19, 2025
  • June 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழ்நாடெங்கும் விசித்திரனுக்கு அதிகரிக்கும் தியேட்டர்கள்
May 10, 2022

தமிழ்நாடெங்கும் விசித்திரனுக்கு அதிகரிக்கும் தியேட்டர்கள்

By 0 515 Views

எம் பத்மகுமார் இயக்கத்தில் நடித்து மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்ற படம் ஜோசப் இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இதனை தமிழில் தயாரிக்க எண்ணம் கொண்டு இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் மூலம் ஆர்கே சுரேஷ் நாயகனாக்கி விசித்திரன் என்ற பெயரில் இந்த படத்தை தயாரித்தது தெரிந்த விஷயம்தான்.

மலையாளத்தில் இயக்கிய அதே எம் பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியிருந்தாலும் இந்தப் படமும் இங்கு வரவேற்பு பெற்று வருவதும் கூட தெரிந்த சங்கதிகள்தான்.

உடல் உறுப்புகள் தானம் என்ற பெயரில் வியாபாரம் பேசும் மெடிக்கல் மாஃபியாக்களை நம் கண்முன் நிறுத்தியது இந்த விசித்திரlன் என்றால் மிகையில்லை.

இந்தப் படத்தில் ஆர்கே சுரேஷ் உடன் நாயகிகளாக பூர்ணா மற்றும் மதுஷாலினி நடித்திருந்தனர். பக்ஸ், இளவரசு, மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஜான் மகேந்திரனின் வசனங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியது.

இந்த படம் வெளியானது முதலே பத்திரிகையாளர்களிடமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அரசியல் பிரபலங்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் ஆர்கே. சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் ஷிவானி, பாலாஜி, ஜூலி, தாமரை உள்ளிட்டோர் தாங்கள் விசித்திரனை கண்டு வியந்தோம் என தெரிவித்தனர்.

விசித்திரன் படத்தில் மாயன் கேரக்டருக்காக 80 கிலோ எடை… 90 கிலோ எடை.. 120 கிலோ எடை என தன் உடல் எடையை ஏற்றி இறக்கி தன்னை பலவாறாக மாற்றிக் கொண்டிருந்தார் ஆர்.கே.சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா தரப்பினரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் விசித்திரன் பெற்று வருவதால் தமிழகத்தில் சில தியேட்டர்களில் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.

பாலா தயாரிப்பில் ஆர்கே சுரேஷ் பட்ட பாடு வீண் போகவில்லை.