January 28, 2026
  • January 28, 2026
Breaking News
June 3, 2020

வைரல் ஆகி வரும் டிக் டாக் ஐஸ்வர்யா ராய் வீடியோ

By 0 986 Views

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் பேசிய வசனத்தை இளம்பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார்.

அதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணை ஐஸ்வர்யாராயைப் போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் சிறிய பட்ஜெட் ஐஸ்வர்யாராய், ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கமெண்டுகளும் பறக்கின்றன.

இதே போல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் போலவே ஒரு பெண் இருப்பதாகக் கூறி போன வருசம் வைரலாக்கினர் நெட்டிசன்கள்.

டிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது.

மேலும் திரைப்பட வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் தங்களையே நடிகர்களாக பாவித்து வீடியோ வெளியிடும் சிலருக்கு திரைத்துறை வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இப்போது இந்த ஐஸ்வர்யா ராய் வீடியோ வைரல் ஆகி வருகிறது. நீங்களும் பாருங்கள்…