September 1, 2025
  • September 1, 2025
Breaking News
August 8, 2019

விஜய் சேதுபதி எடுத்த விவேகமான முடிவு?!

By 0 764 Views

சில தினங்களுக்கு முன்பு டார் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பல மொழிகளில் படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

விஜய்சேதுபதி தன் வேடத்தில் நடிப்பது குறித்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் பலரும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். காரணம் முரளிதரன் தமிழராக இருந்த போதும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் சுயநலத்துடன் சிங்கள அரசின் பக்கம் நின்றவர் என்பது.

இந்த விஷயம் அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் காதுகளில் விழ, இப்போது அந்தப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி முடிவெடுத்திருக்கிறாராம். இன்னும் அதிகாரபூர்வ செய்திகள் இது குறித்து வராத நிலையில் காற்றுவாக்கில் வந்த செய்தி இது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த முடிவை தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்கவே செய்யும்..!