December 13, 2025
  • December 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரசிகர்களுடன் செல்பி எடுத்து மாஸ் காட்டிய விஜய் – எக்ஸ்க்ளூசிவ்
February 9, 2020

ரசிகர்களுடன் செல்பி எடுத்து மாஸ் காட்டிய விஜய் – எக்ஸ்க்ளூசிவ்

By 0 930 Views

விஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதே தெரியும், இது விஜய்யின் மாஸை இன்னும் அதிகரிக்கும் என்று.

போதாக்குறைக்கு அங்கே படப்பிடிப்பு நடத்த விடக்கூடாதென்று பாஜக ஆதரவாளர்கள் கொடி பிடித்தார்களா இன்னும் விஸ்வரூபம் எடுத்தது விஜய்யின் ‘மாஸ்’.

அதேபோல் நெய்வேலியில் படப்பிடிப்பை விஜய் தொடர, கடந்த மூன்று நாள்களாக விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த நெய்வேலிப் பகுதியில் குவிந்து போலீஸார் தடியடி நடத்தும் அளவுக்கு ஆனது. 

மூன்றாவது நாளாக, நேற்றும் குவிந்த தன் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத விஜய் அவர்களைக் காண அவுட்டோர் வேன் மீது ஏறி ரசிகர்களிடம் கையை ஆட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

அத்துடன் அவர்களுடன் செல்பியும் எடுத்தார் அவர். அதை, தனக்கு நெருக்கடி கொடுப்பவர்களுக்கு அனுப்பி ‘பாத்துக்கோ என் மாஸை…?” என்று அனுப்பி வைப்பாரோ என்னவோ..?

ஆந்த செல்ஃபி vairal வீடியோக்கள் இதோ…