October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் 64 படத் தலைப்பை நம்பாதீங்க குமுறும் இயக்குநர்
December 3, 2019

விஜய் 64 படத் தலைப்பை நம்பாதீங்க குமுறும் இயக்குநர்

By 0 1076 Views
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம்.
 
ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘சம்பவம்’ என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சம்பவம்’ என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்றார்.
 
ஆனால், விஜய் 64 படத்தலைப்பு இன்னும் முறையாக அறிவிக்கப்படாத நிலையில் ஏன் இப்படி குமுற வேண்டும் இயக்குநரே..? நீங்க பாட்டுக்கும் போய்ட்டே இருங்க..!