October 26, 2025
  • October 26, 2025
Breaking News
May 15, 2019

விஜய் 64 படம் பற்றி நிலவும் குழப்பங்கள்

By 0 1022 Views

இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றி காற்றுவாக்கில் பல தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

நேற்று விஜய்யின் 64வது படம் பற்றி முக்கியமான தகவல் வெளியானது. அந்தப்படத்தை ஐசரி கணேஷும், விஜய்யின் உறவினர் பிரிட்டோவும் தயாரிக்கவிருப்பதாக வந்த தகவல்தான் அது. அந்தப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம்.

சரி… இந்தத் தகவல் உண்மையானதா என்றால் அதிலும் ஒரு குழப்பம் நிலவுகிறது. விஜய் தரப்பில் இந்தத் தகவலை உறுதி செய்ய மறுக்கிறார்களாம். அவர்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் அது விஜய்யின் பிறந்தநாள் அன்று அறிவிக்கப்படும் என்பதுதான். அதனால் லோகேஷ் கனகராஜும் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறாராம்.

விஜய்யின் பிறந்தநாளான 22 ஜூன் அன்று என்ன தகவல் வெளியாகப்போகிறதோ என்ற இன்பப் பரபரப்பில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள். அது மேற்படி லோகேஷ் கனகராஜ் படமாகவே கூட இருக்கலாம். 

ஆனால், விஜய் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு வரும்வரை எதுவும் உறுதி செய்யப்படாத தகவல்தான்..!