November 22, 2024
  • November 22, 2024
Breaking News
June 18, 2022

வீட்ல விசேஷம் படத்தின் திரை விமர்சனம்

By 0 508 Views

ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘வீட்ல விசேஷம்’. என்றாலும் இந்தியில் பார்த்தவர்களும், தமிழில் பார்த்து ரசிக்கும் அளவில் இயக்கி இருக்கிறார்கள் ஆர் ஜே பாலாஜியும், என் ஜே சரவணனும்.

பாலாஜியே கதையின் நாயகனாக நடிக்க, அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என பாசமான குடும்பம் அவருக்கு இருக்கிறது.

பள்ளி ஆசிரியராக இருக்கும் பாலாஜி தாளாளர் அபர்ணா பாலமுரளியைக் காதலிக்க, காதல் திருமணம் வரை போகிறது.

இந்நிலையில் ஒருநாள் தீடீரென தனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை அறிகிறார் பாலாஜி.அதனால் பல இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். இதனால், அம்மா அப்பாவை வெறுக்க ஆரம்பிக்கிறார்.

ஊரார் இவர்கள் குடும்பத்தையும் ஊர்வசியையும் உறவினர்கள் தவறாக பேசுகிறார்கள். கடைசியில் ஊர்வசி தனது குழந்தையை பெற்றெடுத்தாரா? என்பதே மீதி கதை.

கிண்டல் நடிப்பில் பாலாஜியின் பாய்ச்சல் இதிலும் இருக்கு. குடும்ப பாசம் காட்டும் போதும் குடும்பத்தை வெறுக்கும் போதும் நடிப்பை பாராட்டலாம். தனக்கு எது வருமோ ? அதை தெரிந்து இதற்கேற்ப கொடுத்துள்ளார் ஆர்ஜே. பாலாஜி.

நாயகியாக அபர்ணா பாலமுரளி யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார்.

நகைச்சுவை, செண்டிமெண்ட், பாசம், கண்டிப்பு என ஸ்கோர் செய்கிறார் ஊர்வசி. இதில் நடிப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். இதை சிறப்பாக செய்துள்ளார்.

இவருக்கு நிகராக நடித்துள்ளார் சத்யராஜ். மனைவி ஊர்வசி மற்றும் அம்மா லலிதா இருவரையும் அனுசரித்து செல்லும் குடும்ப தலைவனாக மிளிர்கிறார்.

பாலாஜி பாட்டியாக மறைந்த மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதா.

பாலாஜியின் தம்பியாக நடித்தவரும் மற்ற கேரக்டர்களும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

கிரிஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் செல்வாவின் எடிட்டிங் கச்சிதம்.

ஒரு பெண் நினைத்தால், அவளுக்கு விருப்பம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள்.

வீட்ல விசேஷம் – வித்தியாச விருந்து..!