August 30, 2025
  • August 30, 2025
Breaking News
October 1, 2019

மார்பகமும் அங்கம்தான் கூச்சப்படாதீங்க – வரலஷ்மி வீடியோ

By 0 3784 Views
சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கருத்துகளை கூறினார். 
 
பின்னர் நடிகைவரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டியிலிருந்து…
 
“இந்த ஒரு மாதமாக மார்பக புற்று நோய் குறித்து விமான நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும். மார்பக புற்றுநோய் பற்றி பெண்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். இந்த விழிப்புணர்வு மூலமாக மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை இருக்கிறது என்பதை எடுத்துரைப்பது தான் நோக்கம்.
 
பெண்கள் மார்பகத்தில் ஏதாவது அறிகுறி தென்பட்டால் கண்டிப்பாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகம் உடலின் ஓர் அங்கம் தான். அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கூச்சப்படாமல் தாய், மற்றும் சகோதரியிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். புற்று நோய் குணப்படுத்த கூடிய வியாதிதான். 
 
நாம் மார்பகம் என்றாலே அதைப் பற்றி பேச கூடாது என்ற மன நிலையுடன் இருந்து வந்துள்ளோம். ஆண்களுக்கு எப்படி உடலில் சில விஷயங்கள் இதுக்கிறதோ, அதே போல் பெண்களுக்கு மார்பகம் என்பது ஓர் அங்கம் தான். கூச்சத்தின் காரணமாக பலர் சோதனை செய்வதில்லை..!”