November 21, 2024
  • November 21, 2024
Breaking News
July 3, 2024

மூளைக் கட்டியை எளிதாக அகற்றி சாதனை செய்த வடபழனி காவேரி மருத்துவமனை

By 0 128 Views

வடபழனி காவேரி மருத்துவமனையில் 69 வயது ஆப்பிரிக்க பெண்ணுக்கு சாவித்துளை முறையில் விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக்கான வெற்றிகர சிசிச்சையின் மூலம் நிவாரணம்

சென்னை, 3 ஜூலை 2024: சர்வதேச நோயாளிகள் தனிச்சிறப்பான மருத்துவ சிகிச்சையை தேடிவரும் ஒரு முன்னணி மருத்துவ மையமாக காவேரி மருத்துவமனை வடபழனி தொடர்ந்து இருந்து வருகிறது.

30 ஆண்டுகளுக்கும் அதிக அனுபவமுள்ள நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் ரங்கநாதன் ஜோதி அவர்களின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ் சூடான் நாட்டைச் சேர்ந்த 69 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை சமீபத்தில் வழங்கப்பட்டதன் மூலம் இந்த உண்மை மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்சஸில் உள்ள மருத்துவக் குழுவினர், மிக நுணுக்கமான மற்றும் துல்லியமான விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக்காக சாவித்துளை என்ற (சூப்ரா ஆர்பிட்டல் கிரானியோடமி) மிகக் குறைவான ஊடுருவல் செயல்முறையை மேற்கொண்டது; புருவத்தையொட்டி ஒரு சிறிய கீறலை செய்து அதன் மூலம் மண்டைக்குள் இருந்த கட்டி மென்மையாக அகற்றப்பட்டது.

கிரானியோடமி (மண்டையோடு திறப்பு) என்பது, மூளையை அணுகுவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதி தற்காலிகமாக அகற்றப்படும் ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூளையின் சிக்கலான உடற்கூறியல் மற்றும் முக்கியமான செயல்பாடுகள் காரணமாக இத்தகைய அறுவைசிகிச்சை இயல்பாகவே அதிக சிக்கலானது. முக்கியமான கட்டமைப்புகளுக்கு அருகில் உள்ள கட்டிகளை அகற்றுவதற்கான செயல்முறையினால் சிக்கல் இன்னும் பெரிதாக இருக்கும்.

ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல் தவிர்க்க அதிக துல்லியம் தேவைப்படுகிறது. பாரம்பரியமான மண்டைத்திறப்பு அறுவைசிகிச்சைகளில் பெரும்பாலும் பெரிய கீறல்கள் போடப்படும். இவை குணமாவதற்கு அறுவைசிகிச்சைக்கு பிறகு நீண்ட மீட்பு காலமும் தேவைப்படும். அத்துடன் தொற்று, அதிக இரத்தப்போக்கு மற்றும் பெரிய காய வடு போன்ற அதிகரித்த சிக்கல்களும் பாரம்பரிய அறுவைசிகிச்சையில் இருக்கும்.

இந்த ஆப்பிரிக்க பெண்மணிக்கான சிகிச்சையில் மிகக்குறைந்த ஊடுருவல் தன்மையின் காரணமாக கணிசமான பலன்களை வழங்கும் விழிக்குழிக்கு மேலே மண்டைத் திறப்புக்கான சாவித்துளை அறுவைசிகிச்சை முறை தேர்வு செய்யப்பட்டது. கண் புருவத்தை ஒட்டி ஒரு சிறிய கீறலைச் செய்வதன் மூலம், அறுவைசிகிச்சை நிபுணர்கள் மூளையில் உள்ள கட்டியை, அணுகி அகற்ற முடியும்; அதே நேரத்தில் அதைச்சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் காயத்தையும், சேதத்தையும் குறைக்க முடியும்.

இந்த அணுகுமுறையில் வடு/தழும்பு ஏற்படுவதும் கணிசமாகக் குறைவாக இருக்கும். சிக்கல்களின் அபாயமும் குறைக்கப்படுவதோடு முழுமையான கட்டி அகற்றலுடன் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வேகமாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இந்த மருத்துவ செயல்முறை நுட்பத்தின் துல்லியமானது முக்கியமான பகுதிகளில் அமைந்துள்ள கட்டிகளை அகற்றுவதற்கு சிறந்த வழிமுறையாகும்.

பாரம்பரிய அறுவைசிகிச்சை முறைகளுக்கு இது ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள மாற்று வழிமுறையாகவும் இருக்கும்.

உயர் தெளிவுத்திறன் கொண்ட நுண்ணோக்கி வழிகாட்டுதல் மற்றும் அறுவைசிசிச்சையின்போது நரம்பியல் சார்ந்த தீவிர கண்காணிப்பின் கீழ், காவேரி மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழு இணையற்ற துல்லியத்துடன் மூளையில் இந்த அறுவைசிசிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இத்தகைய மேம்பட்ட நுட்பங்கள், சாவித்துளை அறுவை சிகிச்சையானது அதிகபட்ச துல்லியத்துடன் செய்யப்படுவதை உறுதிசெய்தது; ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் முக்கியமான மூளை கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படாமல் தவிர்த்தது,

அறுவைசிகிச்சையின்போது நரம்பியல் சார்ந்த கண்காணிப்பு செயல்முறை, நோயாளியின் மூளை செயல்பாடுகள் குறித்து நிகழ்நேரக் கண்ணோட்டத்தை வழங்கியது. இதன் மூலம் மூளையின் முக்கியமான செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏதுமின்றி கட்டி முற்றிலுமாக அகற்றப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

டாக்டர் ரங்கநாதன் ஜோதி அவர்களின் நிபுணத்துவமும் மற்றும் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன சாதனங்களும், தொழில்நுட்பமும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக பயனளித்திருப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநரான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது… “வடபழனி காவேரி மருத்துவமனையில், வெளிநாட்டில் இருந்து நிபுணத்துவமிக்க சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்கள் உட்பட அனைத்து நோயாளிகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த, கனிவான சிகிச்சையை வழங்கும் குறிக்கோளின் மீது நாங்கள் ஆழமான உறுதி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நோயாளியும் பிரத்யேகமான கவனிப்பையும், மிக உயர்ந்த தரத்திலான சிகிச்சை பராமரிப்பையும் பெறுவதை உறுதி செய்வது எமது பொறுப்புறுதியாக தொடர்கிறது,”

குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட விழிக்குழிக்கு மேலே மண்டையோடு திறப்பு சிகிச்சையின் நன்மைகள் விரிவானவை. கீறல் அளவைக் குறைப்பதன் மூலம், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் மிகக்குறைவான வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும். இந்த அணுகுமுறை நோய்த்தொற்றின் அபாயத்தையும், சிக்கல்களையும் பெரிதும் குறைக்கிறது. சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு நோயாளிகள் விரைவாகவே திரும்ப முடியும். இதன் மூலம் நோயாளிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் மேம்படுத்தப்படுகிறது.

இத்தகைய நன்மைகள் தான், 69 வயதான சூடான் நாட்டைச் சேர்ந்த இந்த பெண் போன்ற வயதான நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது.

சர்வதேச நோயாளிகள் வடபழனி காவேரி மருத்துவமனையை அதன் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களுக்காக மட்டுமல்லாமல், நம்பிக்கை மற்றும் விரைவில் குணமடைவதற்கு உதவும் ஆதரவான சூழலை வழங்குவதற்கான இம்மருத்துவமனையின் அர்ப்பணிப்பிற்காகவும் தேர்வு செய்கின்றனர். நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் பிற சிறப்பு பிரிவுகளில் மிகச்சிறந்து விளங்கும் இம்மருத்துவமனையின் நற்பெயரும் இங்கு கிடைக்கும் கனிவான, பலன் தரும் சிகிச்சையும் உலகெங்கிலும் இருந்து நோயாளிகளை இங்கு வருமாறு ஈர்க்கிறது.