August 31, 2025
  • August 31, 2025
Breaking News
August 17, 2021

சின்னத்திரை அதிர்ச்சி – ஆனந்த கண்ணன் காலமானார்

By 0 551 Views

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆனந்த கண்ணன் இன்று அதிகாலையில் காலமானார்.

இவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.

பெண் தொகுப்பாளினிகளுக்கு நடுவில் ஆண் தொகுப்பாளர்கள் டிவி நிகழ்ச்சியில் பிரபலமாவதும், தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பதும் கடினமான ஒன்று.
ஆனால் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனைப் பொறுத்தவரை தனது நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சிரித்த முகத்தோடும் கொண்டு செல்லக் கூடியவர்.

சில வருடங்களாக அவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடல் புற்றுநோய் பாதித்தது.

புற்றுநோயின் தாக்கத்தால் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் ஆனந்த கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . சிகிச்சை பலனின்றி அதிகாலையில் காலமானார் .

இவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.