November 28, 2025
  • November 28, 2025
Breaking News
September 9, 2020

தொலைக்காட்சி நடிகை திடீர் தற்கொலை

By 0 672 Views

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்துகொண்டார்.

மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரவானியின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.