தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று அளித்த பேட்டியில், “தமிழக அரசு தற்போது இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 112 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. மீதி உள்ள தியேட்டர்களில் 200 தியேட்டர்கள் மூடப்படும் நிலையில் இருக்கிறது. எனவே மீண்டும், மீண்டும் ஊரடங்கு போடுவதால் எங்களால் தியேட்டர்களை நடத்த முடியாது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களையும் மூட முடிவு செய்துள்ளோம்.
நாளை செவ்வாய்க்கிழமை (நாளை) காலை ஜூம் செயலியில் தியேட்டர் அதிபர்கள் கூட்டம் நடத்தி இது குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்…” என்றார்.
அதன்படி இன்று நடைபெற்ற தியேட்டர் அதிபர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு விதிகளுக்கு உட்பட்டு தியேட்டர்களை தொடர்ந்து இயக்குவது என்று முடிவெடுத் துள்ளனராம்.
ஆக இப்போதைக்கு தியேட்டர்களை அரசின் விதிமுறைகளின்படி இயக்குவார்கள் என்று தெரிகிறது.
எனவே, தமிழகத்தில் தியேட்டர்கள் முழுவதும் மூடப்படும் வாய்ப்பு இல்லை…