அ.ம.மு.கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அ.தி.மு.க.வில் இணைய அவர் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அதில்…
“இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும்.
அதேநேரம் அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் விட்டேன். இதில் குழம்பிப்போன அமைச்சர் கடம்பூர் ராஜூ நான் அ.தி.மு.க.வில் இணைய தூது விடுவதாகக் கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க. என்பது மொட்டை கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம்.
அ.தி.மு.க.வில் யாரும் தலைவர்கள் பேச்சை கேட்பது இல்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவர்களது இஷ்டத்துக்கு உளறி வருகிறார்கள்..!” என்று கூறினார்.