November 22, 2024
  • November 22, 2024
Breaking News
February 25, 2019

ஜெயலலிதா படத்தில் பாகுபலி எழுத்தாளர்

By 0 846 Views

விஜய்யை வைத்து ‘தலைவா’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் விஜய். அதனாலேயே அந்தப்பட வெளியீட்டில் நிறைய சிக்கல் எழுந்தது. அப்போதைய முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.

நிற்க… இப்போது அதே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற தலைப்பில் இயக்கவிருக்கிறார் அதே விஜய். காலம் எப்படி சுழன்றடிக்கிறது என்ற கருத்துடன் இயக்குநர் விஜய் சொல்வதைக் கேளுங்கள்.

Jayalalitha

Jayalalitha

“தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும். ‘தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்’ என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர்.

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களைப் பெற்றவர். இந்த குணாதிசயங்களால்தான் நாம் அனைவரும் அவரை ‘அம்மா’ என்று வணங்குகிறோம்.

இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்றுப் படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.

இந்தப் படத்துக்கான கதை ஐடியாவை கொண்டு வந்ததோடு, இன்றும் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் ‘விப்ரி மீடியா’ தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி. வாழ்க்கை வரலாற்று படங்களை கொடுக்கும் அவரது நோக்கம் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை ரசிகர்கள் பொக்கிஷமாக நீண்ட காலத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

Thalaivi Movie Title

Thalaivi Movie Title

பாகுபலி எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்தப் படத்துக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கும். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். என் படங்களில் மிகச்சிறந்த ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்..!”

விஜய் ‘தலைவா’ என்றால் ஜெயலலிதா வெறும் ‘தலைவி’தானா… அவரை அவரது கட்சித் தொண்டர்கள் அழைக்கும் அளவில் ‘புரட்சித் தலைவி’ என்றே இருக்கலாமே..?!