October 29, 2025
  • October 29, 2025
Breaking News
October 4, 2020

தமன்னாவையும் விடாமல் தாக்கிய கொரோனா

By 0 598 Views

படப்பிடிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில் நடிக நடிகையர் மிகவும் கவனத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

படப் பிடிப்பில் ஈடுபடும் எல்லா தொழிலாளர்களுக்கும் இதே பாதுகாப்பு தேவை பட்டாலும் அவர்கள் மாஸ்க் அணிந்து பணி புரியலாம். ஆனால் நடிகர் நடிகையருக்கு மாஸ்க் அணிந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை.

இந்நிலையில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த மாதம்தான் தன் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தமன்னா கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டார்.

அப்போது அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. ஆனால் தமன்னாவுக்கு தொற்று ஏற்படவில்லை.

தமன்னாவின் பெற்றோர் குணம் அடைந்து விட்ட இந்நிலையில் இப்போது தமன்னாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து தமன்னா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.