வரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ வரத் தயராகிக் கொண்டிருக்க, அந்தப்படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி’யும் வெளியாகவிருக்கிறது.
கார்த்தியின் ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நிலையில் பிகிலை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள் ‘கைதி’ படத்தைப் போட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற நிலையில் ‘கைதி’ வருவதில் பிரச்சினையில்லை.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழனு’ம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று ஆரம்பித்துக் கடைசியில் தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரவிருக்கிறது.
Petromax Tamannah
இந்நிலையில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மைப் பாத்திரமேற்று நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படம் தீபாவளி ரேஸில் குதிக்கிறதாம்.
என்ன தைரியம் பாருங்கள்… ஒரு பண்டிகைக்கு விஜய் படம் வந்தால் அதனுடன் போட்டி போட யாரும் தயங்குவார்கள் என்றிருக்க, லோகேஷ் கனகராஜ் புண்ணியத்தில் ‘கைதி’ வருகிறது. இந்நிலையில் தமிழில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட தமன்னாவை (ஆக்ஷன் படத்தில் அவர் நடிப்பது ஒருபுறம் இருக்கட்டும்…) போட்டிக்குக் களமிறக்கி விட என்ன ‘தில்’ வேண்டும்..?
இருந்தாலும் அந்த தைரியம் பாராட்டப்பட வேண்டியதுதான்..!
‘பெட்ரோமாக்ஸே’தான் வேணுமா என்பது போல ‘தீபாவளி’யேதான் வேணுமா என்று அவர்களை யாரும் கேட்காமல் இருந்தால் சரி..!