காலத்தினால் அழிக்க முடியாத ஒரு பசுமையான நினைவுச் சின்னமாக உருவெடுத்து உள்ளக் கிளர்ச்சியை தூண்டி நிலைத்து நிற்கும் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களை திரையில் தோன்றச்செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பல தேசீய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார் பெரும் புகழ் பெற்றவர்.
பெண்களை முதன்மைப்படுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் மிகஉயரிய படைப்பாளியாக அறியப்படுகிறார். தீர்க்க தரிசியாக விளங்கும் இந்த திரைப்படத் தயாரிப்பாளர் தமன்னா பாட்டியாவை முன்னெப்போதும் கண்டிராத வகையில் பப்ளி பவுன்சர் அவதாரத்தில் முன்னணி கதாபாத்திரமாக தோன்றச்செய்து ஒரு தனித்துவமான கதைக்களத்தை நம் முன்னே காட்சிப்படுத்துகிறார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்ச்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த ‘பப்ளி பவுன்சர் ‘ ( Babli Bouncer) திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான ‘பவுன்சர் நகரமான’ அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் மகிழ்ச்சியூட்டும் கற்பனைக் கதையாகும்
,”ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, இதுவரை சொல்லப்படாத ஒரு கதையை ஆராயும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்போது, அது குறித்து உற்சாகம் அடையவும் எதிர்பார்ப்பில் ஆவலோடு திளைப்பதற்கும் ஏராளமாக இருக்கிறது. ஒரு பெண் பவுன்சரின் இந்தக் கதையை வாழ்க்கையோடு இணைந்த நகைச்சுவை இழையோடு சித்தரிக்க விரும்புகிறேன், அதுவும் மனதை விட்டு அகலாத ஒரு நீடித்த தாக்கத்தை விளைவிக்கிறது ” என்று திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டர்க்கார் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் “பப்லி பவுன்சரின் படப்பிடிப்பு இன்று தொடங்கும் நிலையில், பெண் பவுன்சர்கள் குறித்த உலகத்தின் பார்வையில் இந்தக் கதையை முன்வைக்க எப்போதும் போலவே நான் தயாராக இருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த அற்புதமான கதை, தமன்னா தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்!” என்றார்
படப்பிடிப்பு தொடங்கப்போவது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னா பாட்டியா, கூறினார்,
“பப்லி பவுன்சர் கதையைப் படித்தவுடனே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் காதல் வசப்பட்டுவிட்டேன். ஏனென்றால் நான் இதுவரை கண்ட அனைத்தைக் காட்டிலும் இது ஒரு மிகவும் உற்சாகமான மற்றும் கேளிக்கையான கதாபாத்திரமாகும்.
பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் வரையறுப்பதிலும் மதுர் சார் மிகச்சிறந்த திறமை படைத்தவர். பப்ளியும் அம்மாதிரியான ஒரு வலிமை வாய்ந்த கதாபாத்திரம். ஒரு திரைப்படம் ஒரு பெண் பவுன்சரின் கதையை முதல் முதலாக ஆராயப்போகிறது, அந்த கதாபாத்திரத்தின் குரலாக நான் ஒலிக்கப்போகிறேன் என்பதை அறிந்து நான் அளவிடமுடியாத உற்சாகத்தில் இருக்கிறேன். இந்த முழுமையான புதிய உலகத்தில் பிரவேசிப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை”
“மனிதகுலத்தின் அனுபவங்கள் மற்றும் மேம்பட்ட கற்பனையின் வளமான பன்முகத்தன்மையை எங்கள் கதைகள் மூலம் நாங்கள் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம் புதிய, தனித்துவமான மற்றும் உலகளவில் அனைவரும் கொண்டாடக்கூடிய அளவில் ஒரு வலிமையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.,
பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்ப்படுத்தக்கூடிய அம்மாதிரியான ஒரு கதை பாப்லி பவுன்சர் கதை என்று நாங்கள் கருதுகிறோம். ஜங்லீபிக்ச்சர்ஸ், மதுர், மற்றும் தமன்னா ஆகியோரோடு இணைந்து மனதைகொள்ளை கொள்ளும், உற்சாகமான பொழுதுப்போக்கு அம்சங்களோடு கூடிய திரைப்படத்தை உருவாக்கும் இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறோம்.” என்று இந்தியாவின் டிஸ்னி ஸ்டார், ஸ்டுடியோஸ் தலைவர் பிக்ரம் டக்கல் கூறினார்.
ஜங்லி பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி அம்ரிதா பாண்டே மேலும் கூறினார்” ““மனதுக்கு நெருக்கமாகவும் ஆழ் மனதில் வேரூன்றி ஊக்கமளித்து ஒரு நல்ல உணர்வை உருவாக்கும் சக்திவாய்ந்த பப்ளி கதாபாத்திரத்தின் கதையை பாப்லி பவுன்சர் விவரிக்கிறது. இந்த இதயத்தைத் வருடும் கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் ஆகியோர் உலகத்தில் இதுவரை கண்டிராத வகையில் உருவாக்கியுள்ளனர் என்று நான் நம்புகிறேன். இந்தத் திரைப்படத்திற்காக ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், மதுர் பண்டர்கார் மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோருடன் இணைந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைந்திருக்கிறோம்.
பப்லி பவுன்சர் திரைப்படம் பவுன்சர்களின் முன் பின் அறியாத உலகத்தை ஆராய்கிறது. மேலும் இதில் சவுரப் சுக்லா அத்துடன் அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கருத்துரு, கதை மற்றும் திரைக்கதை: அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது