January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Tag Archives

தி பெட் திரைப்பட விமர்சனம்

by on December 30, 2025 0

பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கை எத்தனை பேரை… அவர்களின் எத்தனை உணர்ச்சிகளைப் பார்த்திருக்கும்..? அப்படி ஊட்டியில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் Bed, தான் பார்த்த கதைகளிலேயே ஒரு சுவாரசியமான கதையை சொல்கிறது.  அதன்படி ஸ்ரீகாந்த் ப்ளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் என நான்கு நண்பர்கள் வார விடுமுறைகளை ‘ குடி’யும் கும்மாளமுமாக கழிக்கிறார்கள். எப்போதும் இப்படியே வார இறுதிகள் கழிவதை மாற்ற நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துக் கொண்டு ஏன் […]

Read More

மகாசேனா திரைப்பட விமர்சனம்

by on December 12, 2025 0

யானை வளர்க்கும் நாயகர்களை பற்றிய கதைகள் சமீபத்தில் தமிழ் படங்களில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இதிலும் பழங்குடியின தலைவராக வரும் நாயகன் விமல் ஒரு யானையை வளர்க்கிறார். அதன் பெயர் சேனா. அந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொருநக்குழுவின் பகைமையும் விமலை, அவரது இனத்தையும் சூழ்ந்து நிற்கிறது. இது ஒரு புறம் இருக்க விமல் வசிக்கும் மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி […]

Read More

மகாசேனா – ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படம்.!

by on December 3, 2025 0

உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நவம்பர் 30ஆம் தேதி முன்னணி பத்திரிகை மற்றும் ஊடக நிபுணர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் படத்தை […]

Read More

துப்பாக்கி சத்தத்துக்கு மத்தியில் புல்லாங்குழல் இசைக்கும் கணேஷ் பாபு – வைரமுத்து

by on November 7, 2023 0

கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு  Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர்.  பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.  இவ்விழாவினில்… கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது… தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர் நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது?, […]

Read More

பரத் பெண் வேடமேற்கும் பொட்டு 1000 தியேட்டர்களில்

by on March 4, 2019 0

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’ இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். பரத் நடித்த படங்களிலேயே வடிவுடையான் எழுதி இயக்கிய இந்தப் படம்தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. […]

Read More

பரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் ‘சத்ரு’

by on February 11, 2019 0

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’. இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் […]

Read More

சேரனுக்கு கேரள நடிகைகள் வைக்கப்போகும் செக்

by on January 24, 2019 0

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர். இந்தப் படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர் “ராஜாவுக்கு […]

Read More

காலக்கூத்து விமர்சனம்

by on May 27, 2018 0

காலம் சிலரின் வாழ்வில் மட்டும் எப்படிக் கொடுமையாக நடந்து கொள்கிறது என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் எம்.நாகராஜன். சிறிய வயதிலேயே தன் பெற்றோரைப் பறிகொடுக்கும் பிரசன்னா, தன்னைப் போலவே தன் பிறந்த நாளில் அம்மாவைப் பறிகொடுக்கும் கலையரசனின் உற்ற நண்பனாகிறார். இந்த நட்பு அவர்கள் வாலிபம் வரை தொடர்கிறது. அப்பாவுடன் வாழ்ந்து வரும் கலையரசனும் தன் சகோதரன் போலவே பிரசன்னாவை நடத்தி வர, இருவருக்கும் காதலும் முளைக்கிறது. பிரசன்னா சிருஷ்டி டாங்கேவையும், கலையரசன் சாய் தன்ஷிகாவையும் காதலிக்கிறார்கள். […]

Read More