March 15, 2025
  • March 15, 2025
Breaking News

Tag Archives

அடுத்த தலைமுறை நாயகர்களை குறிவைக்கும் சூரி

by on June 18, 2019 0

என்னதான் காமெடி நடிகர்களுக்காகப் படம் ஓடினாலும் அவர்கள் ஒரு ஹீரோவுடன் இணைந்துதான் நடிக்க முடியும். அப்படித்தான் அவர்கள் காலம் கடந்தும் வளரும் நாயகர்களுடன் கைகோர்த்துக் கொள்வார்கள். வடிவேலுவும், சந்தானமும் ஹீரோ ஆகிவிட்ட பிறகு சூரியின் காட்டில் அடைமழை அடித்தது. ஆனால், அவர் ‘சிக்ஸ் பேக்’ வைத்துக் கொண்ட காரணத்தால் அவரும் தங்களுடன் மல்லுக்கு நிற்பாரோ என்று பல ஹீரோக்களும் அவரைத் தவிர்த்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்த இடத்தை இப்போது யோகிபாபு ஆக்கிரமித்து வருகிறார். ஆனால், நல்லவேளை சூரி […]

Read More

கொம்பு வச்ச சிங்கம்டா ஷூட் முடிஞ்சுதடா..!

by on May 13, 2019 0

ரெதான் நிறுவனத்தின் இந்தர்குமார் ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.    தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.   1990 – 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் நாயகன் […]

Read More

சீமராஜா விமர்சனம்

by on September 14, 2018 0

‘சரவண பவனி’ல் என்ன கிடைக்கும், ‘தலப்பாக் கட்டி’யில் என்ன கிடைக்கும் என்று சாப்பிடச் செல்பவர்களுக்கு சரியாகவே தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் + பொன்ராம் கூட்டணியில் அமைந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி. அந்த கும்மாளம் ஏற்கனவே இரண்டுமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், கடந்த வேலைக்காரன் படத்தில் சமூகம் சார்ந்து ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்ட சிவகார்த்திகேயனின் புரிந்துணர்வும் இதில் சேர்ந்து கொள்ள கும்மாளம், கொண்டாட்டமாகவும் மாறியிருக்கிறது. அப்படி வழக்கமான சிங்கம்பட்டி, புளியம்பட்டி சீமைகளின் மோதல், மோதலுக்கு […]

Read More

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சீமராஜா பூர்த்தி செய்யும் – பொன்ராம்

by on September 11, 2018 0

இளைய வசூல் மன்னன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சீமராஜாவும் வெற்றிதான் என்ற உறுதியில் இருக்கும் அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பைக் காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்..!” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், “எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது..!” […]

Read More

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

by on July 14, 2018 0

இன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம் ஐந்து பெண்பிள்ளைகளை மகள்களாக அடைந்த சத்யராஜின் ஆண்வாரிசு அடையும் முயற்சி கடைசியாக வெற்றி பெற அப்படி அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து […]

Read More

சிவகார்த்திகேயனின் சீமராஜா பேர்வெல்லுக்கு 2 நாள்

by on June 17, 2018 0

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’24ஏஎம் ஸ்டூடியோஸ்’ ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அமைந்த ‘சீம ராஜா’ என்பது தெரிந்த விஷயம்தான். பொன்ராம் இயக்குவதால் இந்த வெற்றிக் கூட்டணிப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாள்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து ஜூன் 19-ம்தேதியன்று படப்பிடிப்பு முடிந்ததற்கான ஃபேர்வெல் விழா நடக்க இருக்கிறது. சமந்தா, சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் படத்தில் கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது. காமெடிக்கு சூரி, இசைக்கு டி.இமான் […]

Read More

அக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி

by on June 12, 2018 0

சூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ், சூரி என […]

Read More