March 29, 2024
  • March 29, 2024
Breaking News

Tag Archives

மாநாட்டுக்காக அதிரடியாக தயாராகி வரும் சிம்பு வீடியோ

by on January 18, 2020 0
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு பல்வேறு கட்டங்களைக் கடந்து இப்போது படப்பிடிப்பு நிலைக்கு வந்திருக்கிறது.,பாரதிராஜாஎஸ் ஏ சி என்று படத்தில் நடிக்கும் பல்வேறு நடிகர்கள் பட்டியல் வெளியான நிலையில் அப்படத்துக்காக ஆக்ரோஷமாக ஆயத்தமாகி வருகிறார் சிம்பு.அந்தவீடியோக்கள் தான் இங்கே...[video width="320" height="636" mp4="http://gtamilnews.com/wp-content/uploads/2020/01/wp-1579351554812.mp4"]https://gtamilnews.com/wp-content/uploads/2020/01/wp-1579350494634.mp4 http://gtamilnews.com/wp-content/uploads/2020/01/wp-1579351554812.mp4 Read More

சிம்புவை பாராட்டும் உலகின் ஒரே இயக்குநர்

by on January 4, 2020 0

‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வம்பு புகழ் சிம்பு இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். “எல்லோரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் ஏற்ரிருந்தாலும், அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது.   ஃபிளாஸ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடிய பெரிய பாத்திரத்தில் வரும் அவர் ஒரு பைலட்டாக நடித்திருக்கிறார். […]

Read More

சிம்புவை முறைப்படுத்த எழுவர் குழு அமைப்பு?

by on August 30, 2019 0

என்ன செய்தால் சிம்புவை வழிக்குக் கொண்டுவர முடியுமென்று தயாரிப்பாளர்கள் வேதனை கொள்ளாத நாளில்லை. முக்கியமாக அவரை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பெருத்த தலைவலி. அதனால், சிம்புவால் பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி பணம் பெற்றுக்கொண்டு நடிக்கவராத காரணத்தால் சிம்புமீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பிறகு எடுக்கப்பட்ட முடிவில் சிம்பு ஒத்துக்கொண்ட அடிப்படையில் படங்களை முடித்துக் கொடுக்க ஏதுவாக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை […]

Read More

தன்னை நீக்கிய மாநாடு தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி

by on August 14, 2019 0

நடித்து நல்ல பெயர் எடுக்கிறாரோ இல்லையோ, வம்பு வளர்த்தே பெயரெடுப்பதில் சிம்புவுக்கு நிகர் சிம்புதான் – இல்லையென்றால் சிம்புவுக்கு நிகர் ‘எஸ்டிஆர்’தான் எனலாம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அவருக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக வாகுறுதி தந்து அந்தப்படத்துக்கு இயக்குநராக வெங்கட்பிரபுவை ஒப்பந்தம் செய்ய வைத்து, படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தும் சிம்பு சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் அவரைத் தன் படத்திலிருந்து நீக்குவதாக நொந்து போய் […]

Read More

மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டார்

by on August 8, 2019 0

‘மாநாடு’ படம் அறிவிக்கப்பட்ட போதே அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் எச்சரித்தார்கள்- அது தவறான முடிவு என்று. ஆனால், சிம்பு மீது அவர் வைத்த அன்பினாலும், நம்பிக்கையாலும் அது கண்டிப்பாக நடைபெறும் என்ற உறுதியுடன் இருந்தார்.   ஆனால், காலமும், சிம்புவும் தன் கடமையைச் சரிவரச் செய்ய (!), இப்போது தன் தவற்றை உணர்ந்த சுரேஷ் காமாட்சி தன் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், ‘மாநாடு’ படத்தை அவர் கைவிடவில்லை. […]

Read More

ஜூன் 25 முதல் மலேசியாவில் சிம்புவின் மாநாடு

by on June 8, 2019 0

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.   கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. […]

Read More

முன்னாள் காதலிக்காக முழுவீச்சில் நடிக்கும் சிம்பு

by on May 28, 2019 0

ஹன்சிகா மோத்வானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது, ஒட்டுமொத்தக் குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அதில், சமூக ஊடகங்களில் சிம்புவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்ட எட்டு நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது […]

Read More

எனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்

by on May 25, 2019 0

சிம்புவுக்குத் திருமணம் செய்ய பெண் பார்க்கும் படலம் நடப்பதாக சில ஊடகங்களில் இன்று செய்தி வரவே அது குறித்து விளக்க இன்று மாலை கடிதம் ஒன்றை தனது செய்தியாளர் மூலம் மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் சிம்பு… அதன் நகல்…   “ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்றும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. என் தொழில் வாழ்க்கையைக் கடந்தும் என் வாழ்க்கையில் அது முக்கியமான பங்காற்றியுள்ளது.    அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை […]

Read More

சிம்பு தம்பி குறளரசன் மதம் மாறிய வைரல் வீடியோ

by on February 16, 2019 0

டி.ஆரின் இளையமகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இசையமைப்பாளராக இருந்து வருவது தெரிந்த விஷயம்தான். இவர் தன் தந்தை டி.ராஜேந்தர் தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதுகுறித்து டி.ராஜேந்தர் “எம் மதமும் சம்மதம்… ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்துள்ளேன்..!” என்று கூறியுள்ளார். குறளரசன் மதம் மாறிய வீடியோதான் இன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே…

Read More