October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

சிம்ரன் எனக்கு ஜோடி என்றதும் உற்சாகமாகி விட்டேன்..! – சசிகுமார்

by on April 25, 2025 0

*சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், […]

Read More

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் விருமாண்டி நாயகனாக சசிகுமார்

by on January 19, 2021 0

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள். அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் […]

Read More

பாலுமகேந்திரா பற்றிய சசிகுமாரின் அழியாத கோலங்கள்

by on June 1, 2020 0

திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது. “ஹலோ சார்…” “நான் உன்னைப் பார்க்க வரலாமா?” “சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்” ‘ஏன், எனக்கு உன்னோட ஆபிஸ்ல ஒரு கப் காபி கொடுக்க மாட்டியா?” நான் என்ன சொல்ல முடியும்? காலத்தால் அழியாத பெரும் படைப்புகளைக் கொடுத்த கலைஞன். என் அலுவலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாலு மகேந்திரா […]

Read More

கொரோனா தடுப்பு வாலண்டியராக சாலையில் இறங்கிய சசிகுமார் வீடியோ

by on April 19, 2020 0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் […]

Read More

அய்யப்பனும் கோஷியும் தமிழில் சரத்குமாரும் சசிகுமாரும்

by on March 22, 2020 0

சமீபத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கேரள, தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கிடையே நடக்கும் ஈகோ உள்ளிட்ட சண்டையை மிகவும் வித்யாசமான கோணத்தில் காண்பிக்கும் இந்த திரைப்படத்திற்கு இருமாநிலத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பது தெரிந்த விஷயம். அதில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் […]

Read More

திருட்டுக் கதை புகாரில் சிக்கவிருக்கும் பொன்ராம் சசிகுமார்

by on December 2, 2019 0

சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரத்’தை மிஞ்சிய ஒரு கதை அதற்குப்பின் இதுவரை தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். ஏன்..? அவரே கூட அதை மிஞ்சிய ஒரு கதையை இதுவரை எழுதவில்லை. ஆனால், எதனால் அவர் ரசிக்கப்பட்டாரோ அதை மறந்து தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் காட்டிக்கொள்ள தேய்ந்து தேய்ந்து வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் வந்துவிட்ட அவர் இப்போது ஒரு திருட்டுக்கதையில் நடித்து வருவதாக வந்த செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவரை அப்படி சிக்க வைத்திருப்பவர் இயக்குநர் பொன்ராம். அவர் […]

Read More

கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – சுசீந்திரன்

by on July 27, 2019 0

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, எம்.சசிகுமார் நடித்திருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை (27-07-2019) நடைபெற்றது. அதில் இயக்குநர் சுசீந்திரன், சசிகுமார், பாரதிராஜா பேசியதிலிருந்து… சுசீந்திரன் – “நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்றுதான் ‘வெண்ணிலா கபடி குழு’ எடுத்தேன். இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் அவரிடம் வசனங்களைக் கொடுத்து […]

Read More

சசிகுமாரின் 19வது பட நாயகியாகிறார் நிக்கி கல்ராணி

by on February 9, 2019 0

‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, […]

Read More

விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் – பேட்ட விழாவில் ரஜினி

by on December 9, 2018 0

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படத்தில் ரஜினியுடன் நடித்த சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசியதிலிருந்து… “கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு அரசாங்கத்தால் […]

Read More
  • 1
  • 2