July 5, 2025
  • July 5, 2025
Breaking News
  • Home
  • விக்ரம்

Tag Archives

வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்பட விமர்சனம்

by on March 28, 2025 0

ஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் மாறி மாறி ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சீயான் திரையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்கிற ‘கெத்து’தான். பெரியவர் ரவி அவர் மகன் கண்ணன் என்று […]

Read More

தங்கலான் திரைப்பட விமர்சனம்

by on August 15, 2024 0

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்க இந்தப் படத்தின் முதல் பார்வையே மிரட்டியது. அந்த வகையில் தங்கலான் தரத்தை சற்றே உரசிப் பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வட ஆற்காடு மாவட்டப் பகுதியில் நடக்கிறது கதை. அந்தப் பகுதியில் தங்கம் கிடைக்கும் என்று ஒருவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அந்தத் தங்கத்தைக் கண்டுபிடித்துக் கைப்பற்ற நினைத்த வெள்ளைக்காரர் ஒருவர் அங்கிருக்கும் பண்ணையில் வேலை செய்பவர்களை அரசாங்க அச்சுறுத்தலைக் காட்டி அழைத்துச் செல்கிறார். இந்நிலையில் […]

Read More

விக்ரம் திரைப்பட விமர்சனம்

by on June 3, 2022 0

கமல் படம், ரஜினி படம் என்றால் கமல் மற்றும் ரஜினிதான் முதலில் நினைவுக்கு வருவார்கள். அதை யார் இயக்குகிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்.  ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் இது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாகத்தான் தோன்றுகிறது. அதில் கமல் நடித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் கமல் படத்தின் குறியீடுகள் குறைந்தும் லோகேஷ் கனகராஜ் படங்களின் குறியீடுகள் அதிகரித்தும் இருப்பதுதான். அதென்ன லோகேஷ் கனகராஜ் பட குறியீடுகள் என்கிறீர்களா..? பிரியாணி, ஜெயில், கொசு மருந்து […]

Read More

கடாரம் கொண்டான் திரைப்பட விமர்சனம்

by on July 21, 2019 0

தமிழில் நடிப்போச்சிய நடிகர்களை வகை பிரித்தால் சிவாஜி வழியில் கமலும், கமல் வழியில் விக்ரமும் வருவார்கள். அதிலும் தன்னை வருத்திக்கொண்டு கதபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பதில் விக்ரமின் அர்ப்பணிப்பு ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானது (அதுவும் கோலிவுட் சம்பளத்தில் என்பது கூடுதல் செய்தி…) அந்த வகையில் கமல் தயாரித்து விக்ரம் நடிக்கிற படமென்றால் எதிர்பார்ப்பு எப்படி எகிறும்..? அப்படியே இந்த ‘கடாரம் கொண்டான்’ படத்தின் மீதும் எதிர்பார்ப்புச் சுமை கூடியிருக்கிறது. அதை எதிர்கொண்டு படத்தைச் சுமந்திருக்கிறார் விக்ரம். கதைத் திருட்டுகள் […]

Read More

இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் திவ்யங்காவை மணந்தார் – கேலரியுடன்

by on July 14, 2019 0

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ரன்பீர் கபூர் – பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ‘அஞ்சனா அஞ்சனி’ என்ற இந்தி படத்தில் இயக்குநர் ‘சித்தார்த் ஆனந்த்’திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பின் தமிழில் ஏ.ஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி’ மற்றும் ‘7ஆம் அறிவு’ படத்திலும் இணை இயக்குநராகப் பணியாற்றினார். 2014ல் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘ அரிமா நம்பி’ எனும் திரில்லர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அந்தப்பட வெற்றியைத் […]

Read More

சீயான் விக்ரமை இனி கேகே விக்ரம் என்பார்கள்- கமல்

by on July 3, 2019 0

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக, ராஜேஷ் எம்.செல்வா இயக்குவது தெரிந்த செய்தி… இப்படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கமல் பேசியதிலிருந்து… “ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனிக்கு முதலில் ராஜ்கமல் என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்துதான் ‘இண்டர்நேஷனல்’ என்பதைச் சேர்த்தார். என் முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் […]

Read More

நடிகர் சங்க தேர்தல் 2019 வாக்களித்த நட்சத்திர கேலரி

by on June 23, 2019 0

2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் குறிப்பாக […]

Read More

தமிழ் தெலுங்கு இந்தியில் சீயான் நடிக்கும் விக்ரம் 58

by on May 20, 2019 0

கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தியை தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். அது என்ன தெரியுமா..? அவரது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பதுதான்.   நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும்  கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். அதேபோல் தான் இயக்கிய ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் […]

Read More

துருவ் விக்ரமுக்கு நடிப்பு வரவில்லையா-பாலா விளக்கம் பகீர்

by on February 10, 2019 0

கடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது. படத்தில் என்ன குறை என்பதை இயக்குநர்கள் பார்வையில் காட்டாமல் அதை அழிக்கக் கூடாது என்று இயக்குநர்கள் போர்க்குரல் எழுப்பினர். இந்நிலையில் பாலா நேற்று மௌனம் கலைத்தார். அவர் […]

Read More

15 லட்சம் பார்வை கடந்த கடாரம் கொண்டான் டீஸர்

by on January 15, 2019 0

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்துக்கு அறிவித்த நாள் முதலே இரு பெரும் நடிகர்கள் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடியது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று மதியம் வெளியிடப்பட்டது. மளமள்வென்று இதன் பார்வைகள் கூட எட்டு மணிநேரத்துக்குள் 15 லட்சம் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு ஈடாக படமாகப்பட்டிருக்கும் இந்தப்பட டீஸர் வெளியான நாளிலேயே சாதனை படைத்ததில் வியப்பொன்றுமில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் […]

Read More
  • 1
  • 2