June 18, 2019
  • June 18, 2019
Breaking News
  • Home
  • நயன்தாரா

Tag Archives

தர்பார் டிசைனே காப்பியா உடைக்கும் நெட்டிசன்கள்

by on April 9, 2019 0

ஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களில் சிக்கிக்கொண்டு வில்லங்கத்துக்குள்ளான கதை ஊருக்கே தெரியும். இருந்தும் அடுத்து அதைவிடப் பெரிய படமான ரஜினி படம் அவருக்குக் கிடைக்க அதன் படப்பிடிப்பு நாளை மும்பையில் […]

Read More

ஏஆர் முருகதாஸ் ரஜினி படம் எஸ்ஜே சூர்யா வில்லனா?

by on April 8, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடிக்கும் தலைப்பிடப் படாத ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (10-04-2019) அன்று மும்பையில் தொடங்க இருக்கிறது.  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவியது. பல ஊடகங்களிலும் இந்தச் செய்தி வேகமாகப் பரவ, படத்தின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி ரஜினி 167 படத்தில் நயன்தாரா மட்டுமே […]

Read More

ஐரா படத்தின் திரை விமர்சனம்

by on March 28, 2019 0

தேவலோகத்தின் தலைவன் இந்திரன் பவனி வரும் யானை ‘ஐராவதம்’ என்று புராணங்களில் கதைகள் குறிப்பிடுகின்றன. அந்த யானைக்கு பழிதீர்க்கும் குணம் அதிகமாம். அப்படி இந்தப்படத்தில் அதற்கு நேரெதிராக கருப்பு நிறத்தில் வரும் நயன்தாராவும் தன் வாழ்க்கை சீரழியக் காரணமானவர்களை இரக்கமின்றி பழிவாங்குகிறார். அதனால்தான் இந்தப்படத்துக்குத் தலைப்பு ‘ஐரா’. சரி… எதற்காகப் பழி தீர்க்கிறார்..? அது பிளாஷ்பேக் விஷயம். நேரடியாகத் தொடங்கும் கதையில் ஒரு ‘பளிச்’ நயன்தாரா பத்திரிகையாளராக வந்து தனக்குப் பார்க்கும் திருமணத்தில் நாட்டமில்லாமல் கிராமத்தில் பாட்டி […]

Read More

ராதாரவி பேச்சு சர்ச்சை – நயன்தாரா அறிக்கை

by on March 25, 2019 0

“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.   முதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. […]

Read More

திமுக தகுதி நீக்கம் செய்வதைவிட நானே விலகுகிறேன் – ராதாரவி

by on March 25, 2019 0

‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து தரக்குறைவாக ராதாரவி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக உருவெடுத்து ராதாரவியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். அதன் எதிரொலியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு நடிகர் […]

Read More

ஐரா ஸ்கூப் இரண்டு நயன்தாராவுக்கும் தொடர்பில்லை – கேஎம் சர்ஜுன்

by on March 21, 2019 0

‘கேஜேஆர்’ ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’.   கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து…   நடிகர் கலையரசன் –   “இது மிகவும் மகிழ்ச்சியான […]

Read More

சிவகார்த்திகேயனின் மிஸ்டர். லோக்கல் பட சிறப்பு

by on February 2, 2019 0

ஆச்சு… சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் அறிவிச்சாச்சு… ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் அந்தப்படத்தின் டைட்டில் ‘மிஸ்டர். லோக்கல்’. ஆனால், அதை இப்படி எழுதாமல் ஆங்கிலத்தில் Mr என்றும் தமிழில் லோக்கல் என்றும் எழுதுகிறார்கள். இதுதான் இந்தப்படத்தின் சிறப்பா என்று கேட்டு விடாதீர்கள். இதைவிட சிறப்பு இருக்கிறது. ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நயன்தாரா இதில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இதில் இணைவதும் சிறப்பாக இருக்கலாம். முதல்முறையாக சிவா படத்துக்கு ஹிப் ஹாப் […]

Read More