June 16, 2024
  • June 16, 2024
Breaking News
  • Home
  • கொரோனா

Tag Archives

பிரதமர் நிதிக்கு கோலிவுட்டில் முதல் நிதி தந்த அஜித்

by on April 7, 2020 0

சினிமா படப்பிடிப்புகள் முடங்கி விட,திரைப்படத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதில் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர். இவை தவிர பிரதமர், மாநில முதல்வர்கள் கோரிய நிதிக்கு இந்தி, தெலுங்கு நட்சத்திரங்கள் அள்ளிக்கொடுக்க, தமிழில் முதல்வர் நிதி தந்த சிவகார்த்திகேயன் தவிர வேறு யாரும் நிதி உதவி அளிக்காதது பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதில் முக்கியமாக […]

Read More

நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்

by on April 6, 2020 0

கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்தியத் […]

Read More

இந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா ?

by on April 6, 2020 0

பாரதப் பிரதமர் இந்திய மக்களிடையே நமது ஒற்றுமையை காட்டும் வகையில் நேற்று (9 ஆம் தேதி) வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிரச் செய்யும் படி வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா நேற்று அதே 9 மணிக்கு ஒரு வீடியோவை ஷேர் செய்தார். அதில் அவர் இருட்டில் தன் […]

Read More

கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து

by on April 3, 2020 0

கொரோனா விடுமுறை ​​​​கொண்டாட்டமல்ல; ​​​​கிருமி ஞானம். ​​​​கன்னத்திலறைந்து ​​​​காலம் சொல்லும் பாடம்! ​​​​ஊற்றிவைத்த கலத்தில் ​​​​உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் ​​​​அடங்கிக் கிடப்போம் ​​​​அரசாங்க கர்ப்பத்தில் ​​​​இது கட்டாய சுகம் ​​​​மற்றும் விடுதலைச் சிறை ​​​​மரணம் வாசலுக்கு வந்து ​​​​அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் ​​​​காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும் ​​​​ஓசைகளின் நுண்மம் புரிவதே ​​​​இந்த ஊரடங்கில்தான் ​​​​இந்தியப் பறவைகள் ​​​​தத்தம் தாய்மொழியில் பேசுவது ​​​​எத்துணை அழகு! ​​​​நீர்க்குழாயின் வடிசொட்டோசை ​​​​நிசப்தத்தில் கல்லெறிவது ​​​​என்னவொரு சங்கீதம்! ​​​​தரையில் விழுந்துடையும் ​​​​குழந்தையின் சிரிப்பொலிதானே ​​​​மாயமாளவ […]

Read More

வீடுகளில் விளக்கேற்ற சொன்ன பிரதமர் பேச்சை நையாண்டி செய்த கமல்

by on April 3, 2020 0

கொரோனா நடவடிக்கைகளுக்காக மூன்றாவது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒளிஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமீப காலமாக பிரதமர் பேச்சுகளை அதிகமாக விமர்சிக்கும கமல் பிரதமரின் இந்த பேச்சு குறித்தும் நையாண்டி செய்திருக்கிறார். அது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில்… “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் […]

Read More

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

by on April 3, 2020 0

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:- வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது.  மக்கள் சமூக இடைவெளியை […]

Read More

கொரோனா நிதி திரட்ட எஸ்பி பாலசுப்ரணியம் மேற்கொள்ளும் இசை வழி

by on April 2, 2020 0

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் ( https://www.facebook.com/SPB/) அந்த வீடியோவைப் பதிவிடுகிறார் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அவரவர் விருப்பப் பாடல்களைப் பாடுகிறார். மார்ச் 31 வரை சுமார் […]

Read More

7 பேர் தற்கொலை எதிரொலி – கேரளாவில் விதி முறையுடன் மது பான சப்ளை

by on March 31, 2020 0

கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இதுவரை 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போகப்போக கொரோனாவில் இறந்தவர்களை விட குடிநோயாளிகள் இறப்பு அதிகமாக இருக்குமோ என்று எண்ணி குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கேரள அரசு நிபந்தனை அடிப்படையில், மது பாட்டில்களை வழங்க முடிவெடுத்துள்ளது. அதற்காக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர், குடிநோயாளிகளுக்கு நிபந்தனை அடிப்படையிலான மதுவிற்பனை வழங்க […]

Read More

கொரோனா ரிசல்டுக்கு காத்திருக்கும் காலா நாயகி ராதிகா ஆப்தே

by on March 30, 2020 0

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார். குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார். தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்”  என்று எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனால் ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு என்கிற செய்தி பரவியது. இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, “லண்டனிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தேன். அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு […]

Read More
  • 1
  • 2