December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனா ரிசல்டுக்கு காத்திருக்கும் காலா நாயகி ராதிகா ஆப்தே
March 30, 2020

கொரோனா ரிசல்டுக்கு காத்திருக்கும் காலா நாயகி ராதிகா ஆப்தே

By 0 700 Views

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார்.

தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்”  என்று எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இதனால் ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு என்கிற செய்தி பரவியது.

இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, “லண்டனிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தேன். அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைக்கு சென்றேன். பரிசோதனையின் முடிவு இன்னும் வரவில்லை.

என்றாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையிலேயே இரண்டு வாரங்களுக்கு என்னை தனிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்…”. என்று கூறியிருக்கிறார்.

போல்ட் & பியூட்டி புல் என்பது ராதிகாவுக்கு பொருந்தும்தானே..?