March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனா நிதி திரட்ட எஸ்பி பாலசுப்ரணியம் மேற்கொள்ளும் இசை வழி
April 2, 2020

கொரோனா நிதி திரட்ட எஸ்பி பாலசுப்ரணியம் மேற்கொள்ளும் இசை வழி

By 0 469 Views

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நிதியைத் திரட்டுவதற்கு புதிய இசை முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தந்து தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் ( https://www.facebook.com/SPB/) அந்த வீடியோவைப் பதிவிடுகிறார் எஸ்பிபி.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அவரவர் விருப்பப் பாடல்களைப் பாடுகிறார். மார்ச் 31 வரை சுமார் 5 லட்சம் வரை அவர் நிதி திரட்டியுள்ளாராம்.

100 ரூபாய் என்பது குறைவான தொகையாக இருந்தாலும், அனைவருமே நிதி அளிக்க முன் வரவேண்டும் என்ற நோக்கத்தில் நிர்ணயித்துள்ளாராம். அதற்கு மேலும் கொடுப்பவர்கள் தாராளமாகக் கொடுக்கலாம் என்று கேட்டுள்ளார்.

அவருடைய இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.