April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜோர்டானில் 58 பேருடன் சிக்கிக் கொண்ட பிரித்விராஜ் மீட்கப் படுவாரா?
April 2, 2020

ஜோர்டானில் 58 பேருடன் சிக்கிக் கொண்ட பிரித்விராஜ் மீட்கப் படுவாரா?

By 0 613 Views

 மலையாள நடிகர் பிருத்விராஜ் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர் .

இப்போது, ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இதில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட குழு சிறிது நாட் களுக்கு முன், ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் சென்றது.

ஜோர்டானில் இருக்கும் வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான், கொரோனா தீவிரம் அடைந்தது.

ஆனாலும் ஹைலெவல் இன்ஃபுளூசியன்ஸை யூஸ் பண்ணி இண்டியன் எம்பசி மூலம் சிறப்பு அனுமதி பெற்று ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாராமல் கொரோனா தீவிரம் காரணமாக, அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக பிருத்விராஜ் தெரிவித்து இருந்தார்.

கூடவே அதில், ‘உலகம் தற்போது இருக்கும் சூழலில் எங்கள் 58 பேரை மீட்பது என்பது அதிகாரிகளின் கவலையாக இருக்காது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அது சரியானதும் கூட. எங்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு, இங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிப்பது, எங்கள் கடமை. அதனால் இதைத் தெரிவிக்கிறோம்’ என்று தெரிவித்து இருந்தார்.

இதை அடுத்து, கேரள அமைச்சர் ஏ.கே.பாலன், தற்போதைய சூழலில் ஆடுஜீவிதம் படக்குழுவை மீட்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

இயக்குனர்பிளஸ்சி, ஜோர்டானில் இருந்து தங்களை மீட்பது தொடர்பாக கேரள பிலிம்சேம்பருக்கு இமெயில் அனுப்பி உள்ளார். அவர்களின் விசா முடிவடைவது பற்றியும் அதில் கூறி இருந்தார்.

இது பத்தி மத்திய அமைச்சர் வி.முரளிதரனுடன் பேசினேன். அப்போது விசாவை நீட்டிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் நாடு திரும்புவது சாத்தியமில்லை என்றும் சொன்னார்.

இதனால் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று ஏ.கே.பாலன் சொல்லி இருக்கிறார்.