November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • கர்நாடகா

Tag Archives

மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தண்ணீர் தரலாம் – குமாரசாமி

by on July 23, 2018 0

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே இருக்கும் நான்கு அணைகள் போதாதென்று தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் ‘மேகதாது’வில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். கர்நாடகாவில் உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரிய அளவிலானதாக இருக்கும். ஓப்பந்தப்படியே சரியாக தண்ணீர் திறப்பதில்லை என்ற நிலையில் புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அணை கட்ட […]

Read More

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

by on June 15, 2018 0

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து… இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது பருவ மழை தொடர்ந்தால் நடுவர் மன்ற உத்தரவின்படி மாதா மாதம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதை அடுத்து, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து […]

Read More

சென்னையில் கன்னடப் படத்துக்குத் தடை விதித்தபோது ரஜினி எங்கே போனார்..?

by on June 2, 2018 0

கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தைத் திரையிடக் கூடாதென்று சில அமைப்புகள் கோரி வரும் நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்.. கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ரஜினி, ‘‘காலா படத்துக்கான எதிர்ப்பைப் பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்..!” என்றார். ஆனால், கர்நாடக […]

Read More

கர்நாடகாவில் காலா திரையிடக் கூடாதென்பது என்ன நியாயம் – பொன். ராதாகிருஷ்ணன்

by on June 2, 2018 0

கோவை மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதிலிருந்து… “கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்குத் தீர்வு தந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமையக் கையெழுத்திட்ட நிதின் கட்காரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. அந்த […]

Read More

கர்நாடகா – நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

by on May 25, 2018 0

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். மந்திரி சபையில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் உள்ளிட்டு மந்திரிகள் பதவியேற்க உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், குமாரசாமி […]

Read More

குமாரசாமி பதவி ஏற்பில் கலந்து கொள்ளும் அர்விந்த் கெஜ்ரிவால்

by on May 21, 2018 0

கர்நாடகாவில் வரும் 23-ந்தேதி புதனன்று மாநில முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளது தெரிந்த விஷயம். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற […]

Read More

கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு : பாஜக ஆட்சியைப் பிடிக்கும் – எடியூரப்பா

by on May 12, 2018 0

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தளில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது… தேர்தல் முடிவு தெரியும் தினமான மே 15-ல் கர்நாடகாவில் முதல்வரும், காங்., தலைவருமான சித்தராமையா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வாரா அல்லது பா.ஜ.வின் எடியூரப்பாவிடம் தோற்று ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பாரா என்பது தெரிந்து விடும். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க 222 இடங்களிலும், காங்கிரஸ் 220, ஜனதா தளம் பகுஜன்சமாஜ் கூட்டணி கட்சி 199 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Read More

மோடியிடம் சித்தராமையா 100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

by on May 7, 2018 0

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வழக்கறிஞர் உக்ரப்பா, பா.ஜ.க. தேசிய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்களை அனுப்பி வைத்துள்ளார். பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ்களின் நகலில் இருந்து:- ‘எனது கட்சிக்காரரான முதல் மந்திரி சித்தராமையா மீது தரக்குறைவான கருத்துக்களையும் பொய் கருத்துக்களையும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். சித்தராமையா மீது சுமத்தப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் […]

Read More

ஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா

by on May 6, 2018 0

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சொனியாவும் வரும் 8ம்தேதி ஒரே நாளில் பிரச்சாரம் செய்கின்றனர். இந்நிலையில், பெலகாவியில் நேற்றைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றார். எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டினார். அத்துடன் நிற்காமல், யாரெல்லாம் […]

Read More

உச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு

by on May 3, 2018 0

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று […]

Read More