July 9, 2025
  • July 9, 2025
Breaking News

Tag Archives

சப்தம் திரைப்பட விமர்சனம்

by on March 1, 2025 0

தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. மொழிகள் தோன்றுவதற்கு முன்னால், பல வகையில் எழுப்பப்படும் ஒலிகள்தான் தகவல்களைக் கொண்டு சேர்த்தன. மொழியே கூட ஒலியின் அடிப்படையில் அமைந்ததுதான். ஆக தகவல் பரிமாற்றத்துக்கு சப்தம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்ற லைனைப் பிடித்து நம்மை ஒரு திகிலோடு கூடிய ரசிக அனுபவத்துக்குள் இட்டுச் செல்கிறார் இயக்குனர் அறிவழகன். அறிவழகன் படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துச் செல்கிறோமோ அவை எல்லாமே இருக்கின்றன – கூடவே இதுவரை நம் செவிகள் திரையரங்கிற்குள் […]

Read More

விஜய் படங்கள் இயக்குநரின் வேதனைப் பதிவு

by on August 27, 2019 0

விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே…   “கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், […]

Read More

நட்பே துணை திரைப்பட விமர்சனம்

by on April 4, 2019 0

இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் சீசனில் ஒருவர் கூட சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. நட்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என்பது டைட்டிலிலேயே தெரிந்தாலும் அதை மிஞ்சி தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை கதையின் மையப்பகுதியாக வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். கூடவே இளமை, காதல் ஐட்டங்களை இடைச்செருகலாக வைத்து படத்தை வணிக ரீதியில் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு. காரைக்காலில் நடக்கும் கதையில் நண்பர்களுடன் […]

Read More

யு டர்ன் விமர்சனம்

by on September 14, 2018 0

இது சமந்தாவின் சீசன் போலிருக்கிறது. அதிலும் சமந்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி ‘ஹீரோயின் ஓரியன்டட்’ ஆகக் கதை சொல்லியிருப்பதால் ‘இது சமந்தா ஸ்பெஷல்..!’ பெற்றோரின் விருப்பத்துக்காக கணவன், குழந்தை என்று திருமண பந்தத்தில் விழாமல் தன் சுய விருப்பத்தின் பேரில் பத்திரிகையாளராகிச் சாதனை படைக்க நினைக்கும் சமந்தாவின் வாழ்வில் நிகழும் ஒரு ‘திக் திக்’ சம்பவம்தான் படத்தின் கதை. (இதற்கு மேல் கதை சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும்…) வழக்கமாக நாம் பாலங்களைக் கடக்கையில் இடையில் மீடியனுக்காக […]

Read More

ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – சமந்தா அக்கினேனி

by on September 1, 2018 0

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் வெளியாவது தெரிந்த விஷயமாக இருக்கலாம். தெரியாத சில விஷயங்களுக்கு கீழே வாருங்கள். கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘சமந்தா அக்கினேனி’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு […]

Read More