March 25, 2025
  • March 25, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – சமந்தா அக்கினேனி
September 1, 2018

ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – சமந்தா அக்கினேனி

By 0 1159 Views

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் வெளியாவது தெரிந்த விஷயமாக இருக்கலாம். தெரியாத சில விஷயங்களுக்கு கீழே வாருங்கள்.

கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘சமந்தா அக்கினேனி’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை ‘கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார்.

“இந்த ‘யு-டர்ன்’ கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் திரில்லாக இருக்கும்.

கன்னட படம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காக தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன். சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் பல நல்ல சினிமாக்களை பார்த்தவர்கள், இந்த படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்..!” என்றார் இயக்குனர் பவன் குமார்.

Samantha

Samantha

“இயக்குனர் பவன் ரொம்ப தெளிவானவர், அவருக்கு என்ன தேவையோ அதைச் சரியாக கேட்டு வாங்குவார். 10 வருடங்கள் கழித்து சமந்தாவுடன் மீண்டும் நடிக்கும்போது அவர் ஒரு சிறந்த நடிகையாக உருவாகியிருப்பதை பார்க்கிறேன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிறைய மாற்றியிருக்கிறார்..!” என்றார் நடிகர் ராகுல் ரவீந்திரன்.

“வாழ்வில் சில விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்போம், ஆனால் சினிமாவில் நல்ல கதைகள் நம்மை கேட்கும்போது நடித்து விட வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறப்பான படத்தை கொடுப்பது என்பது தான் மிக சவாலான விஷயம். அதனால் தான் பவன் குமார் படம் நடிக்கிறீங்களா என கேட்டவுடனேயே அவருக்காகவே நடிக்க ஓகே சொன்னேன்..!” என்றார் நடிகர் ஆதி.

“இந்தப் படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதைதான் படத்தின் ஹீரோ. லூசியா படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் அது நிறைவேறியிருக்கிறது.

இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்தப் படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அதுதான் இந்தப் படத்துக்குள் என்னைக் கொண்டு வந்தது.

எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன்..!” என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.

“நான் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முயற்சித்தேன். ஆனால் அதை வாங்க முடியவில்லை. எப்படியாவது இந்த படத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என நினைத்தேன். அது தான் இந்த படத்தை நான் ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது. சமந்தா இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது.

U turn

U turn

சமந்தா நடித்த சமீபத்திய படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி வருகின்றன. இந்த படமும் நிச்சயம் நல்ல வசூலைக் கொடுக்கும். இந்த படத்தின் ஒரிஜினல் கன்னட பதிப்பை 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன், எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருந்தார் பவன். அது தான் படத்தின் ஹைலைட்…!” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இந்த ‘யு டர்ன்’ தியேட்டர் வாசல்களில் ‘ட்ராஃபிக் ஜாமை’ ஏற்படுத்துமா பார்க்கலாம்..!