October 15, 2025
  • October 15, 2025
Breaking News
April 7, 2019

சூர்யா 38 படப்பிடிப்பு சுதா இயக்க நாளை தொடக்கம்

By 0 812 Views
செல்வராகவன், கேவி ஆனந்த் படங்களைத் தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின்  பூஜை இன்று நடந்தது.  
தொடர்ந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.
 
இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ குணீத் மோங்கா இணைந்து தயாரிக்கிறார்.
 
இப்படத்தில் சூர்யாவின் நாயகியாக முதல்முறையாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் இந்தியா முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்களாம்.
 
படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் கையாளுகிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். இணை தயாரிப்பை  ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஏற்கிறார்.