August 31, 2025
  • August 31, 2025
Breaking News
May 9, 2021

மே 24 க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை

By 0 588 Views
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாளை( 10 -05- 2021 )முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்படும்.
 
கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளில் இன்று அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 
அத்துடன் சென்னை தலைமையகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. அப்படியொரு நிலை ஏற்பட்டால் தொழில்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படும்..!” என்று தெரிவித்தார்.