shrithika wedding
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வாழ்வைத் தொடங்கி, பின்னர் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ருத்திகா மேலும் சில படங்களில் நாயகியாக நடித்தார்.
எதிர்பார்த்தபடி தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் போனவருக்கு திருமுருகன் இயக்கி நடித்த ‘நாதஸ்வரம்’ சீரியலில் நாயகியாக நடிக்க அதிர்ஷ்டம் அடித்தது. நாதஸ்வரம் ஸ்ருத்திகா என்றே அறியப்பட்டவர் தொடர்ந்து திருமுருகனின் ‘குல தெய்வம்’, ‘கல்யாண பரிசு’ ஆகிய சீரியல்களில் நடித்து வெற்றிகரமான டிவி நடிகையாகக் கோலோச்சினார்.
விரைவில் எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார் ஸ்ருத்திகா. அதன்படி நேற்று முன் தினம் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமணப் புகைப்படத்தை வெளியிட்டு, “நான் இப்போது மிஸஸ். ஸ்ருத்திகா சனீஷ்” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆக, அவரது அறிவிப்பின் படியே சனீஷ் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது.
ஷார்ட் & ஸ்வீட் மேரேஜ்..?
shrithika wedding photo
இதோ அவரது திருமண புகைப்படம்,