July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மறைந்த வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவியின் காணிக்கை
October 1, 2020

மறைந்த வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவியின் காணிக்கை

By 0 586 Views

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து விஜய் டிவியின் எல்லா நகைச்சுவை ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் கடந்த 6 மாதமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாமல் வருமானம் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது மறைவை ஒட்டி அவரது உடலுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவருடன் பணிபுரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுள்ளார். ஆனால், அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மூலமாக பணம் சம்பாதித்த விஜய் தொலைக்காட்சியோ எந்த உதவியும் இதுவரை அறிவிக்கவில்லை.

வடிவேல் பாலாஜியின் நண்பரும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் ஜட்ஜுமான சேது ‘வடிவேலு பாலாஜியின் குடும்பத்துக்கு சேனல் உதவி செய்யவேண்டும் ‘ எனக் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றுவோர் இணைந்து வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ கீழே…