January 12, 2026
  • January 12, 2026
Breaking News
November 12, 2018

சௌந்தர்யா ரஜினிக்கு மீண்டும் டும்… டும்… டும்..!

By 0 2048 Views

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்குத் திருமணமாகி விவாகரத்தான கதை எல்லோருக்குமே தெரியும். அதன்பிறகு அவர் தானுண்டு, தன் சினிமா முயற்சிகளுண்டு என்று இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் மனதை ஒரு இளைஞர் கவர, அது காதலாகிக் கசிந்து ரஜினி காதுக்குப் போக, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், இந்த முறை தடபுடலாக இல்லாமல் சிம்பிளாக இந்தத் திருமணம் நடக்குமாம்.

Vishagan Vanangamudi

Vishagan Vanangamudi

சௌந்தர்யாவின் மனம் கவர்ந்தவர் வேறு யாருமல்ல. ‘வஞ்சகர் உலகம்’ படம் பார்த்தவர்களுக்கு அதில் இரண்டாவது ஹீரோவாக வந்த விசாகனைத் தெரிந்திருக்கும். ‘விசாகன் வணங்காமுடி’ என்று டைட்டிலில் போடுவார்கள். 

மிகப்பெரிய கோடீஸ்வர வீட்டுபிள்ளையான விசாகன், எம்.பி.ஏ முடித்துவிட்டு நடிப்பின் மேலுள்ள ஆர்வத்தால் வெளிநாடுகளில் நடிப்புப் பயிற்சி பெற்றவராம். இனி ரஜினியின் மருமகனாவதில் நடிப்பில் முன்னணிக்கு வரவும் கூடும்.

விசாகன், சௌந்தர்யா இருவருக்கும் இது மறுமணம் என்பது கூடுதல் தகவல்.

இரு தினங்களுக்கு முன் நிச்சயம் ஆன நிலையில் விரைவில் திருமணச் செய்தி வரலாம் என்கிறார்கள்.

ஆக, ரஜினியின் இரண்டு மாப்பிள்ளைகளும் ஹீரோக்கள்தான்..!