January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கிராமத்து கிரிக்கெட் வீரர்களை மகிழவைத்த சிவகார்த்திகேயன்
April 17, 2019

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை மகிழவைத்த சிவகார்த்திகேயன்

By 0 869 Views

இயக்குனர்கள் பொன்ராம், எம்.பி.கோபியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ‘ஸ்டூடியோகிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ படப்பிடிப்பில் மதிய விருந்தும் விருதும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது பெற்றதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர்.

M.Rajesh, Ponram

M.Rajesh, Ponram

“திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் இடைவிடாத படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் உசிலம்பட்டி விழாவில் கலந்து கொள்ள முடியவிலை. எனவே, கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் மிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.எம் அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார்.

அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றிகள்..!” என்றனர் பொன்ராமும், எம்.பி.கோபியும்.