July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டிவி ஹீரோவை திடீர் திருமணம் செய்த பாடகி – திருமண கேலரி
September 17, 2019

டிவி ஹீரோவை திடீர் திருமணம் செய்த பாடகி – திருமண கேலரி

By 0 2792 Views

தமிழ் சினிமாக் காதல்களை மிஞ்சியவை தமிழ் சினிமாக் கலைஞர்களின் காதல்கள். எப்போது எந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்து திருமணத்தைத் தொடும் என்று சொல்ல முடியாது.

அப்படி ஒரு காதல் திருமணம் இது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தியும், 400க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் பாடகி ரம்யாவுக்கும், சின்னத்திரை ஹீரோ ‘நீலக்குயில்’ புகழ் சத்யாவுக்கு காதல் துளிர்த்து நேற்று நண்பர்கள் மத்தியில் திடீர் திருமணத்தில் முடிந்தது.

‘பிக் பாஸ் சீசன் 2’ மூலம் மக்களுக்கும் நன்கு அறிமுகமான ரம்யா மீது எல்லோருக்கும் நல்ல கருத்தே நிலவுகிறது. நேற்று நடைபெற்ற படு சிம்பிளான இவர்களின் திடீர் திருமணத்தில் ரம்யாவுடன் பிக்பாஸில் இடம்பெற்ற மும்தாஜும், ஜனனி அய்யரும் முக்கிய விருந்தனர்களாக இருந்தார்கள். 

அவர்களைத்தவிர நடிகை ஷனம் ஷெட்டியும் திருமணத்துக்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். 

முன்னதாக ரம்யாவுக்கும், பாடகர் அர்ஜுனுக்கும் 2017-ல் திருமணம் நடந்து பிறகு கருத்து வேற்றுமையால் இருவரும் பிரிந்தது நினைவிருக்கலாம்.   

எப்படி ஆனாலும் எல்லோரிடத்தும் நல்ல பெயரெடுத்த ரம்யாவுக்கும், சத்யாவுக்கும் புதுவாழ்வு இனிக்கட்டும். வாழ்த்துக்கள்..!

திருமண கேலரி கீழே…

3

Image 3 of 20