January 23, 2026
  • January 23, 2026
Breaking News
November 14, 2018

ரசிகர்களுக்காக சிம்பு வெளியிட்ட அவசர அறிக்கை

By 0 1383 Views

சமீபகாலமாக சிம்பு ரசிகர்கள் விஷாலைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் முக்கியக் காரணம் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டதுதான்.

இதன் காரணமாக சிம்பு ரசிகர்கள் எந்தெந்த சமூக வலை தளங்கள் உண்டோ அங்கெல்லாம் தொன்றி விஷாலை நேரடியாகவே தாக்கிப் பேசி வருகின்றனர்.

இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக சிம்பு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகக் கண்மணிகளே… யாரையும், எதற்காகவும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம். நமக்கு எதிரான முடிவுகள் தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்டதல்ல. ஒரு அமைப்பு எடுத்த முடிவாகும். நமக்கு அது சாதகமாகும் என்று எதிர்பார்ப்போம்.

நாம் எதற்கும் பதட்டமடையாமல் நம் வேலையை மட்டும் பார்ப்போம். அன்பை மட்டுமே விதைப்போம். மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

#நீங்கள்இல்லாமல்நானில்லை . நாம் நம் கடமையைச் செய்வோம். பொங்கலுக்குக் கண்டிப்பாக வருவோம்…” என்கிற பொருளில் பேசியிருக்கிறார்.

ஏற்கனவே அஜித்தின் ‘விஸ்வாசமு’ம், ரஜினியின் ‘பேட்ட’யும் பொங்கலுக்கு வரும் நிலையில் சிம்புவும் வந்தால் கவுன்சிலுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கட்டாயம் திண்டாட்டம்தான்.